தமிழகம்

சுய உதவிக் ​குழுவினரின் பொருட்கள் கண்காட்சி: அண்ணா பல்கலை.யில் 3 நாட்கள் நடைபெறுகிறது

செய்திப்பிரிவு

சென்னை: சர்​வ​தேச பெண்​கள் தினத்தை முன்​னிட்டு மகளிர் சுய உதவிக்​குழு​வினர் மற்​றும் பெண் தொழில் ​முனை​வோர் தயாரித்​துள்ள பொருட்​களின் கண்​காட்சி மற்​றும் விற்​பனை அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் இன்று (புதன்​கிழமை) தொடங்கி 3 நாட்​கள் நடை​பெறுகிறது.

அண்ணா பல்​கலைகழக மகளிர் மேம்​பாட்டு மையம், சர்​வ​தேச பெண்​கள் தினத்தை கொண்​டாடும் வகை​யில் பெண் தொழில்​முனை​வோர் தயாரித்​துள்ள பொருட்​களின் கண்​காட்சி மற்​றும் விற்​பனை நிகழ்வை பல்​கலைக்​கழக வளாகத்​தில் இன்று முதல் 3 நாட்​களுக்கு நடத்த உள்​ளது.

          

பல்​கலைக்​கழகத்​தின் கிண்டி பொறி​யியல் கல்​லூரி வளாகத்​தில் ஐகியூஏசி கட்​டிடத்​தின் முன்​புறம் உள்ள சாலை​யிலும், விவே​கானந்தா கலை​யரங்​கத்தை ஒட்​டி​யுள்ள சாலை​யிலும் இந்த கண்​காட்சி மற்​றும் விற்​பனை நடை​பெறும்.

இதில் பெண் தொழில்​முனை​வோர் மற்​றும் மகளிர் சுயஉதவிக்​குழு​வினரின் தயாரிப்​பு​கள் பல்​வேறு அரங்​கு​களில் காட்​சிப்​படுத்​தப்​படும்.

இந்த கண்​காட்​சி, விற்​பனை நிகழ்ச்​சியை அண்ணா பல்​கலைக்​கழக பதி​வாளர் (பொறுப்​பு) வி.குமரேசன், பல்​கலைக்​கழக ஒருங்​கிணைப்​புக்​குழு உறுப்​பினர் பேராசிரியர் பி.டி.என்​. ஸ்ரீதர் ஆகியோர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி வைக்​கின்​றனர். இந்த கண்​காட்சி வரு​கிற 6-ம் தேதி வரை தின​மும் காலை 9 மணி முதல்​ மாலை 5 மணி வரை நடைபெறும்.

SCROLL FOR NEXT