தமிழகம்

டாஸ்மாக் கடைகளில் 25 புதிய வகை மதுபானங்கள் விரைவில் அறிமுகம்

விலை நிர்ணயிக்கும் பணி நடைபெறுகிறது

செய்திப்பிரிவு

சென்னை: ​டாஸ்​மாக் கடைகளில் 25 புதிய வகை மது​பானங்​களை அறி​முகம் செய்ய திட்​ட​மிட்​டுள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

தமி​ழ​கத்​தில் 4,000 டாஸ்​மாக் கடைகள் உள்​ளன. இங்கு பிராந்​தி, விஸ்​கி, வோட்கா உள்​ளிட்ட இந்​தி​யத் தயா​ரிப்பு வெளி​நாட்டு மது வகை​களும், பீர், ஒயின் உள்​ளிட்​ட​வை​யும் விற்​பனை செய்​யப்​படு​கின்​றன. 7 மது​பான ஆலை​களிடம் இருந்து பீர் வகை​கள், ஒரு ஆலை​யிடம் இருந்து ஒயின், 11 ஆலை​களிடம் இருந்து இதர மது வகை​களை டாஸ்​மாக் நிறு​வனம் கொள்​முதல் செய்​கிறது.

தமி​ழ​கத்​தில் தயா​ரிக்​கப்​படும் 174 மது வகை​கள், 40 பீர் வகை​கள், 4 ஒயின் வகை​கள் மற்​றும் பிற மாநில மது​பானங்​களில் 6 மது வகை​கள், 5 பீர், 5 ஒயின் வகை​கள் விற்​கப்​படு​கின்​றன. 538 வெளி​நாட்டு ரக மது வகை​களை டாஸ்​மாக் நிறு​வனம் இறக்​குமதி செய்​து, வணிக வளாகங்​களில் உள்ள மதுக்​கடைகளில் விற்​பனை செய்​கிறது.

டாஸ்​மாக் கடைகளில் அவ்​வப்​போது புதிய மது வகை​கள் அறி​முகம் செய்​யப்​படு​கின்​றன. அந்த வகை​யில், புதிய மது வகை​களை அறி​முகம் செய்​வது தொடர்​பாக மது​பான உற்​பத்​தி​யாளர்​களு​டன் டாஸ்​மாக் அதி​காரி​கள் பேச்​சு​வார்த்தை நடத்​தி, 25 புதிய மது வகை​களை அறி​முகம் செய்ய திட்​ட​மிட்​டுள்​ளனர்.

பேச்சுவார்த்தை இதுகுறித்து, டாஸ்​மாக் அதி​காரி​கள் கூறியதாவது, “டாஸ்​மாக் சில்​லறை விற்​பனைக் கடைகளில் புதிய வகை மது​பானம், பீர் விற்​பது தொடர்​பாக 20-க்​கும் மேற்​பட்ட நிறு​வனங்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்​டது. அதில், 25 புதிய மது வகை​கள் தேர்வு செய்​யப்​பட்​டு, விலை நிர்​ண​யம் செய்​யும் பணி நடந்து வரு​கிறது. டாஸ்​மாக் இயக்​குநர்​கள் குழுக் கூட்​டத்​தில் இதற்கு ஒப்​புதல் பெறப்​பட்ட பிறகு, மதுக்​கடைகளில் புதிய வகை மது​பானங்​கள் விரை​வில் விற்​பனைக்கு கொண்டு வரப்​படும்” என்​றனர்​.

SCROLL FOR NEXT