ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி நிலம் அபகரிப்பு: திமுக பிரமுகர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு

ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்புடைய பங்களாவுடன் கூடிய இடம். உள்படம்: ராம்குமார்

ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்புடைய பங்களாவுடன் கூடிய இடம். உள்படம்: ராம்குமார்

Updated on
1 min read

திருச்சி: ஸ்ரீரங்​கம் ரங்​க​நாதர் கோயிலுக்​குச் சொந்​த​மான ரூ.50 கோடி மதிப்​பிலான இடத்​தை, போலி ஆவணங்​கள் மூலம் அபகரித்​த​தாக திமுக பகுதி செய​லா​ளர் உள்பட 6 பேர் மீது மாநகர குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப்பதிவு செய்​துள்​ளனர். இந்த விவ​காரத்​தில் திமுக​வினர் விஞ்​ஞானரீதியில் ஊழல் செய்​பவர்​கள் என்​பதை நிரூபித்​துள்​ள​தாக அமைச்​சர் ரமேஷ் விமர்​சித்​தார்.

திரு​வானைக்​காவலைச் சேர்ந்​தவர் என்​.​ராம்​கு​மார். திமுக ஸ்ரீரங்​கம் பகு​திச் செய​லா​ளர். ஸ்ரீரங்​கம் காந்தி சாலை​யில் ரங்​க​நாதர் கோயிலுக்​குச் சொந்​த​மான ரூ.50 கோடி மதிப்​பிலான இடத்தை ராம்​கு​மார் போலி ஆவணங்​கள் மூலம் அபகரித்​துக் கொண்​ட​தாக ஸ்ரீரங்​கம் கோயில் இணை ஆணை​யர் சிவ​ராம்​கு​மார், மாநகர குற்​றப் பிரிவு போலீ​ஸில் செப்​.10-ம் தேதி புகார் அளித்​துள்​ளார்.

அதில் ஸ்ரீரங்​கம் காந்தி சாலை​யில் கோயிலுக்​குச் சொந்​த​மான பங்​களா​வுடன் கூடிய 7,515 சதுர அடி இடத்​தை, தங்​கள் இடம் எனக் கூறி சென்னை நங்​கநல்​லூர் ரங்​க​ராஜன் மனைவி பத்​மஜா, பெங்​களூரு கிருஷ்ண​சாமி மனைவி விஜ​யா, இவர்​களின் சகோ​தரர்​கள் கோடம்​பாக்​கம் சவுந்​தர​ராஜன், புதுச்​சேரி லாஸ்​பேட்டை வெங்​கட​வரதன் ஆகியோர் சேர்ந்​து, ராம்​கு​மார் பெயருக்கு ஸ்ரீரங்​கம் சார்​ப​தி​வாளர் அலு​வல​கத்​தில் 2022 டிச.5-ம் தேதி கிரை​யம் செய்து கொடுத்​துள்​ளனர்.

இதற்​காக அவர்​கள் ரூ.2.90 கோடி பெற்​றுள்​ளனர். அப்​போதைய ஸ்ரீரங்​கம் சார் பதி​வாள​ரும் உடந்​தை​யாக இருந்​துள்​ளார் என குறிப்​பிடப்​பட்​டிருந்​தது. இப்​பு​காரின்​பேரில் 6 பிரிவு​களின்​கீழ் ராம்​கு​மார், சார்​ப​தி​வாளர் உள்பட 6 பேர் மீது வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர். முன்​னாள் அமைச்​சர் சேகர் பாபுவுக்கு நெருக்​கமானவராக ராம்​குமார் அறியப்​படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஞ்​ஞான ஊழல்: இதனிடையே இந்த விவ​காரம் குறித்து அமைச்சர் ரமேஷ் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறும்போது, கோயில் சொத்தை திமுக பகு​திச் செய​லா​ளர் ராம்​கு​மார், போலி ஆவணங்கள் தயாரித்து சட்​ட​விரோத​மாகதனது பெயருக்கு மாற்றியுள்​ளார். இடத்​தின் மூலப்​பத்​திரம் தொலைந்​து​விட்​ட​தாக புதுச்​சேரி​ காவல் நிலை​யத்​தில் சான்​றிதழ் பெற்று பத்திரப் பதிவு செய்​துள்​ளனர். இதன்​மூலம் இந்த விவ​காரத்​தில் திமுக​வினர் விஞ்​ஞான ஊழல் செய்​பவர்​கள் என்​பதை நிரூபித்​துள்​ளனர் என்​றார்.

இதுகுறித்து ராம்​கு​மார் கூறும்​போது, “இந்த சொத்து ரங்​க​சாமி ஐயங்​காருக்கு பூர்​வீக சொத்​து. இவரது வாரிசுகள் நீதிப​தி​யாக​வும் விஞ்​ஞானி​யாக​வும் சிபிஐ வழக்​கறிஞ​ராக​வும் பதவி வகித்​தவர்​கள். ஆவணங்​கள் சரிபார்க்​கப்​பட்ட பின்​னரே ​ப​திவு செய்​யப்​பட்​டது. தற்​போது இந்த சொத்து குறித்த வழக்கு உயர் நீதி

மன்​றத்​தில் உள்ளது. இது தெரி​யாமல் வழக்​குப்​ப​திந்துள்​ளனர். எவ்​வித தவறும் நடக்​க​வில்​லை. எனது கட்​சி​யிலேயே சிலர் எனது பதவிக்காக​ இதை செய்​திருக்​கலாம்​” என்​றார்​.

<div class="paragraphs"><p>ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்புடைய பங்களாவுடன் கூடிய இடம். உள்படம்:&nbsp;ராம்குமார்</p></div>
ஜனவரியில் சுவிட்சர்லாந்து செல்கிறார் முதல்வர் விஜய்: உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்கிறார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in