சென்னை: தேர்தலை முன்னிட்டு, உரிமம் பெற்று வைத்துள்ள 2,205 பேர், தங்களது துப்பாக்கிகளை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பாதுகாப்பு கருதி தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் போலீஸாரின் அனுமதி பெற்று துப்பாக்கிகள் வைத்திருப்பார்கள்.
அதன்படி, சென்னையில் 2,735 பேர் வைத்துள்ளனர். இவர்களில் 500 பேர் விளையாட்டு மற்றும் பாதுகாப்பு சேவை உள்பட பல்வேறு காரணங்களுக்காக வைத்துள்ளனர்.
தேர்தல் நேரங்களில் உரிமம் பெற்று வைத்துள்ளவர்கள் அந்த துப்பாக்கிகளை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், விளையாட்டு மற்றும் சேவை துறையில் வைத்திருப்பவர்கள் துப்பாக்கிகளை ஒப்படைக்க தேவையில்லை.
இதற்கிடையே, 2,205 பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்த நிலையில் 30 பேர் தங்களிடமுள்ள துப்பாக்கிகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.