அண்ணாமலை | கோப்புப்படம் 
தமிழகம்

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 21,397 போக்சோ வழக்குகள்: அண்ணாமலை குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் 4 ஆண்​டு​களில் 21,397 போக்சோ வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ள​தாக ‘வீ த லீடர்ஸ்’ அமைப்​பின் தலை​வர் அண்​ணா​மலை தெரி​வித்​துள்​ளார்.

பெண்​களின் கல்​வி, பாது​காப்​பு, பொருளா​தா​ரம், சுகா​தா​ரம் மற்​றும் அரசி​யல் பிர​தி​நி​தித்​துவ இடைவெளி​களைக் களைய அக்​டோபர் மாதம் முழு​வதும் விழிப்​புணர்வு இயக்​கத்தை வீ த லீடர்ஸ் அமைப்பு தொடங்கி உள்​ளது. இந்​நிலை​யில், அமைப்​பின் தலை​வர் அண்​ணா​மலை, 128 பக்​கங்​கள் கொண்ட விரி​வான பெண்​கள் கொள்கை ஆவணத்தை நேற்று வெளி​யிட்​டார்.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் 2020 முதல் 2024 வரையி​லான கால​கட்​டத்​தில் போக்​சோ, பாலியல் வன்​கொடுமை, பாலியல் துன்​புறுத்​தல், பின்​தொடர்ந்து தொல்லை கொடுத்​தல் மற்​றும் ஆட்​கடத்​தல் உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் மொத்​தம் 26,145 வழக்​கு​கள் பதி​வாகி​யுள்​ளன. இதில் போக்சோ வழக்​கு​கள் மட்​டுமே 21,397 ஆகும். இக்​கால​கட்​டத்​தில் பதிவு செய்​யப்​பட்ட பாலியல் துன்​புறுத்​தல் வழக்​கு​கள் தீவிர​மாக உயர்ந்​துள்ளன என்​ப​தை​யும் புள்​ளி​விவரங்​கள் காட்​டு​கின்​றன.

பெண்​கள் மேல்​நிலைக் கல்​வியை நிறைவு செய்​வது, அவர்​களின் எதிர்​பார்க்​கப்​படும் வரு​வாய் ஈட்​டும் திறனை 44.8 சதவீதம் வரை உயர்த்​தும் என்​ப​தை​யும், பெண்​களின் தொழிலா​ளர் பங்​களிப்பு விகிதத்தை 9.6 சதவீத புள்​ளி​கள் அதி​கரிக்​கும் என்​ப​தை​யும் ஆய்வு நிரூபிக்​கிறது.

அரசி​யல் அதி​காரமளித்​தலில், முடி​வெடுக்​கும் உயர் தளங்​களில் பெண்​களின் பிர​தி​நி​தித்​து​வம் இன்​னும் மிகக் குறை​வாகவே உள்​ளது. இந்​தி​யா​வில், மக்​களவை இடங்​களில் 13.8 சதவீதம் மற்​றும் மத்​திய அமைச்​சர​வை​யில் 5.6 சதவீதம் மட்​டுமே பெண்​களின் பிர​தி​நி​தித்​து​வ​மாக உள்​ளது. அதே சமயம் தமிழகத்​தில் 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிட்​ட​வர்​களில் பெண்​கள் 11.01 சதவீதம் மட்​டுமே ஆவர்.

இந்த அக்​டோபர் மாத பிரச்​சார இயக்​க​மானது, பெண்​களும், ஆண்​களும் ஒரு பொது​வான உயரிய இலக்கை நோக்கி இணைந்து செயல்​படும் ஒரு பாது​காப்​பான, ஆரோக்​கிய​மான, பொருளா​தார ரீதி​யாக தற்​சார்பு கொண்ட மற்​றும் முன்​னேற்​றத்​துக்​கான சூழலை உரு​வாக்​கு​வதை நோக்​க​மாகக் கொண்​டுள்​ளது.

SCROLL FOR NEXT