சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், பிறவிலேயே காது கேளாத குழந்தைகளுக்கு காக்ளியர் கருவி பொருத்தும் சிகிச்சையின் 20-வது ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சையில் பயனடைந்த குழந்தைகளுடன் இந்திய மாண்டிசொரி மையத்தின் தலைவர் உமா சங்கர், ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தர் மருத்துவர் உமாசேகர், இணை துணைவேந்தர் மருத்துவர் மகேஷ் வக்கமுடி, மருத்துவக்கல்லூரி தலைவர் மருத்துவர் கே.பாலாஜி சிங் உள்ளிட்டோர்.

 
தமிழகம்

ஸ்ரீராமச்சந்திராவில் காக்ளியர் கருவி பொருத்தும் சிகிச்சையின் 20-வது ஆண்டு நிறைவு விழா

300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளனர்

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை, போரூரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா உயர் கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தில், பிற​விலேயே காது கேளாத குழந்​தைகளுக்கு காக்ளியர் கருவி பொருத்​தும் சிகிச்​சை​யின் 20-வது ஆண்டு நிறைவு விழா நேற்று நடை​பெற்​றது.

விழா​வில், சிகிச்சை பெற்ற குழந்​தைகள் ஆடல், பாடல் மற்​றும் பல்​வேறு கலை நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. ராமச்​சந்​தி​ரா​வின் முதல் காக்ளியர் கருவி பொருத்​தும் அறுவை சிகிச்​சையை 3 வயதில் செய்து கொண்ட, முதுகலை பட்​டப்​ படிப்பு படித்து வரும் கல்​யாணி கார்த்​திக் விழா​வில் பங்​கேற்று பரத​நாட்​டிய நடனம் ஆடி​னார்.

          

விழாவை தொடங்கி வைத்​து, காக்ளியர் கருவி பொருத்​திய குழந்​தைகளின் பெற்​றோருக்​கான வழி​காட்டு முறை கையேட்டை வெளி​யிட்ட இந்​திய மாண்​டிசோரி மையத்​தின் தலை​வர் உமா சங்​கர் பேசுகை​யில், “கேட்​கும் திறன் குறை​பாடு கொண்ட குழந்​தைகளுக்கு சரி​யான நேரத்​தில், உரிய முறை​யில் சிகிச்சை அளிக்​கும் காது, மூக்​கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்​கள், கேட்​பியல் மற்​றும் பேச்சு மொழித்​துறை பயிற்சி நிபுணர்​கள், மயக்​க​வியல் மருத்​து​வர்​கள், சமூக பணி​யாளர்​கள் மற்​றும் மறு​வாழ்வு நிபுணர்​கள் உள்​ளிட்​ட​வர்​களின் அர்ப்​பணிப்பு சேவை​கள் பாராட்​டத்​தக்​கது.

குழந்​தைகளின் மீது வெளிப்​புற கருத்​துக்​களை திணிப்​ப​தை​விட, அவர்​கள் தங்​களுக்கே உரிய கற்​றல் பாதை​யில் முன்​னேற வழி​காட்​டு​தல் மிக முக்​கி​யம் ஆகும்” என்​றார். ராமச்​சந்​தி​ரா​வில் காக்ளியர் இம்ப்​ளான்ட் சிகிச்​சை​யில் இது​வரை 300-க்​கும் மேற்​பட்ட குழந்​தைகள் பயனடைந்​துள்​ளனர்.

இக்​குழந்​தைகளில் பலர் தங்​கள் குறை​பாடு​களில் இருந்து மீண்டு சாதாரண குழந்​தைகளை போல பள்ளி மற்​றும் கல்​லூரி​களில் படித்து வரு​கின்​றனர். ராமச்​சந்​தி​ரா, காக்ளியர் சிகிச்சை பற்​றிய விழிப்​புணர்வு முகாம்​கள் பல கிராமப்​புறங்​களில் ஏற்​பாடு செய்து பிற​வி​யிலேயே காது கேளாத குழந்​தைகளின் மறு​வாழ்​வுக்​கான ஒரு அடித்​தளத்தை உரு​வாக்கி வரு​கிறது.

இந்த விழா​வில் ஸ்ரீராமச்​சந்​திரா உயர் கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தின் துணைவேந்​தர் மருத்​து​வர் உமாசேகர், இணை துணைவேந்​தர் மருத்​து​வர் மகேஷ் வக்​க​முடி, மருத்​து​வக்​கல்​லூரி தலை​வர் மருத்​து​வர் கே.​பாலாஜி சிங், மருத்​துவ இயக்​குநர் மருத்​து​வர் ஆர்​.பி.சு​தாகர் சிங், மருத்​துவ கண்​காணிப்​பாளர் மருத்​து​வர் பி. சுரேந்​திரன், காது, மூக்​கு, தொண்டை அறுவை சிகிச்​சைத் துறை தலை​வர் மருத்​து​வர் எஸ்​.பிரசன்ன குமார், கேட்​பியல் மற்​றும் பேச்சு மொழித் துறை முதல்​வர் மருத்​து​வர் பிர​காஷ் பூமி​நாதன், சிறப்பு அலு​வலர்​ ரூபா நாக​ராஜன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT