தமிழகம்

SIR: தஞ்சாவூர் மாவட்டத்தில் 2.06 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் 7,989 இரட்டை பதிவு கொண்ட வாக்காளர்கள் உள்பட 2,06,503 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.1.2026-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதில், 27.10.2025 -ம் தேதியினுடைய வாக்காளர் பட்டியலானது, சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 27.10.2025-ம் தேதியினுடைய வாக்காளர் பட்டியலின்படி வாக்காளர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,311 வாக்குச்சாவடிகளில், 10,18,573 ஆண் வாக்காளர்கள், 10,79,800 பெண் வாக்காளர்கள், 188 மூன்றாம் பாலினத்தவர்கள் உட்பட மொத்தம் 20,98,561 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

சட்டமன்ற தொகுதிகள்: திருவிடைமருதூர்: 1,33,232 ஆண்கள், 1,37,255 பெண்கள் மற்றும் 10 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,70,497 பேர்.

கும்பகோணம்: 1,33,560 ஆண்கள், 1,41,603 பெண்கள் மற்றும் 16 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,75,179 பேர்.

பாபநாசம்: 1,31,273 ஆண்கள், 1,38,135 பெண்கள் மற்றும் 21 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,69,429 பேர்.

திருவையாறு: 1,34,363 ஆண்கள், 1,41,784 பெண்கள் மற்றும் 23 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,76,170 பேர்.

தஞ்சாவூர்: 1,34,239 ஆண்கள், 1,46,912 பெண்கள் மற்றும் 74 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,81,225 பேர்.

ஒரத்தநாடு: 1,22,646 ஆண்கள், 1,30,763 பெண்கள் மற்றும் 6 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,53,415 பேர்.

பட்டுக்கோட்டை: 1,20,572 ஆண்கள், 1,30,790 பெண்கள் மற்றும் 23 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,51,385 பேர்.

பேராவூரணி: 1,08,688 ஆண்கள் 1,12,558 பெண்கள் மற்றும் 15 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,21,261 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது, 27.10.2025-ஆம் தேதிய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த 20,98,561 வாக்காளர்களுக்கும் வாக்காளர் கணக்கெடுப்பு படிவமானது அச்சிடப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக 4.11.2025 முதல் வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டது. வாக்காளர்களால் நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் 14.12.2025 முடிய திரும்ப பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்ப தீவிர திருத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, 27.10.2025-ஆம் தேதியினுடைய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த வாக்காளர்களில் கீழ்க்கண்ட எண்ணிக்கையிலான கண்டறிய இயலாத, நிரந்தரமாக குடிபெயர்ந்த, இறந்த மற்றும் இரட்டை பதிவு கொண்ட வாக்காளர்கள் 9.84 சதவீதம் கண்டறியப்பட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் விவரம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 22,279 கண்டறிய இயலாதவர்களும், 66,842 நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்களும், 1,09,241 இறந்த நபர்களும், 7,989 இரட்டைப் பதிவுகளும், இதர இனங்களில் 152 வாக்காளர்கள் என மொத்தம் 2,06,503 நபர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

திருவிடைமருதூர் தொகுதியில் 417 கண்டறிய இயலாதவர்களும், 4,822 நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்களும், 16,370 இறந்த நபர்களும், 843 இரட்டைப் பதிவுகளும், இதர இனங்களில் 33 வாக்காளர்கள் என மொத்தம் 22,485 நபர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

கும்பகோணத்தில் 6,544 கண்டறிய இயலாதவர்களும், 11,497 நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்களும், 13,059 இறந்த நபர்களும், 915 இரட்டைப் பதிவுகளும், இதர இனங்களில் 35 வாக்காளர்கள் என மொத்தம் 32,050 நபர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

பாபநாசத்தில் 470 கண்டறிய இயலாதவர்களும், 5615 நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்களும், 15,048 இறந்த நபர்களும், 930 இரட்டைப் பதிவுகளும், இதர இனங்களில் 21 வாக்காளர்கள் என மொத்தம் 22,084 நபர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

திருவையாறில் 968 கண்டறிய இயலாதவர்களும், 9,537 நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்களும், 15,039 இறந்த நபர்களும், 940 இரட்டைப் பதிவுகளும், இதர இனங்களில் 14 வாக்காளர்கள் என மொத்தம் 26,498 நபர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூரில் 12,815 கண்டறிய இயலாதவர்களும், 17,399 நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்களும், 12,084 இறந்த நபர்களும், 1313 இரட்டைப் பதிவுகளும், இதர இனங்களில் 33 வாக்காளர்கள் என மொத்தம் 43,644 நபர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

ஒரத்தநாட்டியில் 462 கண்டறிய இயலாதவர்களும், 9,870 நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்களும், 16,447 இறந்த நபர்களும், 1248 இரட்டைப் பதிவுகளும், இதர இனங்களில் 16 வாக்காளர்கள் என மொத்தம் 28,043 நபர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

பட்டுக்கோட்டையில் 247 கண்டறிய இயலாதவர்களும், 4,556 நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்களும், 11,459 இறந்த நபர்களும், 826 இரட்டைப் பதிவுகளும் என மொத்தம் 17,088 நபர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

பேராவூரணியில் 356 கண்டறிய இயலாதவர்களும், 3,546 நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்களும், 9,735 இறந்த நபர்களும், 974 இரட்டைப் பதிவுகள் என மொத்தம் 14,611 நபர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

கூடுதல் வாக்குச்சாவடிகள்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,311 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தன. அவைகள் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனையின்படி நீண்ட தூரம் சென்று வாக்காளர்கள் வாக்கு அளிக்கும் வாக்குச்சாவடிகளும், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் இனம் கண்டறியப்பட்டு, அவ்வாக்குச்சாவடிகள் மறுவரையறை செய்யப்பட்டு 185 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,496 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியல் விவரம்: இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக மொத்தம் உள்ள வாக்காளர்கள்:

9,19,973 ஆண் வாக்காளர்கள், 9,71,935 பெண் வாக்காளர்கள், 150 மூன்றாம் பாலினத்தவர்கள் உட்பட மொத்தம் 18,92,058 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

சட்டமன்ற தொகுதிகள் வாரியாக: திருவிடைமருதூர்: 1,22,152 ஆண் வாக்காளர்கள், 1,25,852 பெண் வாக்காளர்கள் மற்றும் 8 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,48,012 பேர்.

கும்பகோணம்: 1,18,284 ஆண்கள், 1,24,830 பெண்கள் மற்றும் 15 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,43,129 பேர்.

பாபநாசம்: 1,20,433 ஆண்கள், 1,26,894 பெண்கள் மற்றும் 18 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,47,345 பேர்.

திருவையாறு: 1,22,335 ஆண்கள், 1,27,315 பெண்கள் மற்றும் 22 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,49,672 பேர்.

தஞ்சாவூர்: 1,13,307 ஆண்கள், 1,24,228 பெண்கள் மற்றும் 46 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,37,581 பேர்.

ஒரத்தநாடு: 1,09,664 ஆண்கள், 1,15,702 பெண்கள் மற்றும் 6 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,25,372 பேர்.

பட்டுக்கோட்டை: 1,12,249 ஆண்கள், 1,22,028 பெண் வாக்காளர்கள் மற்றும் 20 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,34,297 பேர்.

பேராவூரணி: 1,01,549 ஆண்கள், 1,05,086 பெண்கள் மற்றும் 15 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,06,650 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT