தமிழகம்

காய்ச்சல், சளிக்கான 205 மருந்துகள் தரமற்றவை

செய்திப்பிரிவு

சென்னை: ​​காய்ச்​சல், சளி பிரச்​சினை​களுக்​கான 205 மருந்துகள் தரமற்​றவை​யாக இருப்​பது கண்​டறியப்​பட்​டுள்​ளது. நாடு முழு​வதும் விற்​பனை செய்​யப்​படும் அனைத்து வகை​யான மாத்​திரை, மருந்துகள் மத்​திய மற்​றும் மாநில மருந்து தரக்​கட்​டுப்​பாட்டு வாரி​யங்​கள் மூலம் ஆய்வு செய்​யப்​படு​கின்​றன.

ஆய்​வின்​போது, தரமற்ற மற்​றும் போலி மருந்துகள் கண்​டறியப்பட்​டால், சம்​பந்​தப்​பட்ட நிறு​வனங்​கள் மீது உரிய நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. அதன்​படி, கடந்த மாதத்​தில் மட்​டும் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மருந்​துகளின் மாதிரி​கள் ஆய்​வுக்கு உட்​படுத்​தப்​பட்​டன.

அதில், காய்ச்​சல், சளி, கிரு​மித் தொற்​று, ஜீரண மண்டல பாதிப்பு உள்​ளிட்ட பிரச்​சினை​களுக்​கான 205 மருந்துகள் தரமற்​ற வை​யாக​வும், 2 மருந்துகள் போலி​யாக​வும் இருந்​தது கண்​டறியப்​பட்​டது. அதன் விவரங்​கள் மத்​திய மருந்து தரக்​கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் https://cdsco.gov.in/ இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT