சென்னை: தமிழகத்தில் 2025-ம் ஆண்டு அரசு பணிகளுக்கு 20,471 பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபாலசுந்தரராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்த 2025-ம் ஆண்டு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவுபணிகள் விரைவுபடுத்தப்பட்டுபல்வேறு பணிகளுக்கு 20,471 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2024-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025-ல் கூடுதலாக9,770 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நேரடி நியமனங்களில் சமூகநீதியை வலுப்படுத்தும் வகையில் 1,007 பின்னடைவு காலிப்பணியிடங்கள் (எஸ்சி-எஸ்டி) நிரப்பப்பட்டுள்ளன. மேலும் 761 பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தெரிவு பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்வு நடைமுறைகளில் நேரலை மூலம் வெளிப்படைத்தன்மை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.