கு. ராமச்சந்திரன், ஜி.விஜய் ஆனந்த், சி.கு​மார், ஐ.ஜெயா பிரின்சஸ், சி.லட்சுமி, சி.பாஸ்கர்

 
தமிழகம்

தமிழகத்தைச் சேர்ந்த 20 போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் பதக்கம்: மத்திய அரசு அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ​காவல்துறை​யில் சிறப்​பாகப் பணி​யாற்​று​வோரை கவுரவிக்​கும் வகை​யில், மத்​திய அரசு சார்​பில் குடியரசுத் தலை​வர் பதக்​கங்​கள், குடியரசு தினம் மற்​றும் சுதந்​திர தினம் ஆகிய இரு தினங்​களில் வழங்​கப்​படு​கிறது.

அதன்​படி, 2026-ம் ஆண்டு சுதந்​திர தினத்​தையொட்​டி, தமிழக காவல் துறை​யில் பணி​யாற்​றும் 20 போலீஸ் அதி​காரி​களுக்கு குடியரசுத் தலை​வரின் பதக்​கங்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. அவ்​விருதுகளில் குடியரசு தலை​வரின் தகை​சால் பணிக்​கான பதக்​கம் 3 காவல் அதி​காரி​களுக்​கும், மெச்​சத்​தக்க பணிக்​கான பதக்​கம் 17 காவல் அதி​காரி​களுக்​கும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

குடியரசுத் தலை​வரின் தகை​சால் பணிக்​கான பதக்​கம் தமிழக காவல்​துறையைச் சேர்ந்த விருதுநகர் லஞ்ச ஒழிப்​புத் ​துறை கூடு​தல் எஸ்பி கு.​ராமச்​சந்​திரன், சென்னை தலை​மை​யிடத்து க்யூ பிரிவு குற்​றப்​புல​னாய்​வுத் துறை கூடு​தல் எஸ்பி ஜி.​விஜய் ஆனந்த், மணி​முத்​தாறில் உள்ள தமிழ்​நாடு சிறப்​புக் காவல் 9-ம் அணி உதவி தளவாய் சி.கு​மார் ஆகிய 3 அதி​காரி​களுக்கு வழங்​கப்​படு​கிறது.

மெச்​சத்​தக்க பணிக்​கான பதக்​கங்​கள் பெறுவோர் விவரம்:

சேலம் மாவட்ட தலை​மை​யிட கூடு​தல் எஸ்பி மு.சோமசுந்​தரம், நாகப்​பட்​டின மண்டல கடலோர பாது​காப்பு குழும கூடு​தல் எஸ்பி க.சிவசங்​கர், திருப்​பத்​தூர் மாவட்ட தலை​மை​யிட கூடு​தல் எஸ்பி பொ.கோ​விந்​த​ராஜு, ராம​நாத​புரம் மாவட்​டம், முதுகுளத்​தூர் உட்​கோட்​டம் டிஎஸ்பி செ.சண்​முகம், ஆவடி​யில் உள்ள தமிழ்​நாடு சிறப்பு காவல் 13-வது அணி உதவி தளவாய் செ.மணி​மாறன், தூத்​துக்​குடி மாவட்​டம் குற்​றப்​பிரிவு குற்​றப்​புல​னாய்​வுத் துறை இன்​ஸ்​பெக்​டர் ஐ.ஜெயா பிரின்​சஸ், சென்னை தனிப்​பிரிவு குற்​றப் புல​னாய்​வுத்​துறை இன்​ஸ்​பெக்​டர் செ.ம​தி​மாறன், சென்னை பாது​காப்​புப்பிரிவுகுற்​றப்​புல​னாய்​வுத் துறை இன்​ஸ்​பெக்​டர் பெ.​மாரியப்​பன், நீல​கிரி மாவட்​டம் குற்​றப்​பிரிவு குற்​றப்​புல​னாய்​வுத் துறை இன்​ஸ்​பெக்​டர் கி.சரஸ்​வ​தி, திருச்சி குற்​றப்​பிரிவு குற்​றப்​புல​னாய்​வுத் துறை கள்​ளநோட்டு தடுப்பு பிரிவு இன்​ஸ்​பெக்​டர் சு.லட்​சுமி, திருப்​பூர் நகர குற்ற ஆவணக் காப்பக இன்​ஸ்​பெக்​டர் ஜி.பத்​தருன்​னிசா பேகம், சென்னை லஞ்ச ஒழிப்​புத்​துறை இன்​ஸ்​பெக்​டர் க.கோ​பால், சென்னை க்யூ பிரிவுகுற்​றப்​புல​னாய்​வுத் துறை இன்​ஸ்​பெக்​டர் சி.லட்​சுமி, சென்னை இணை​யதள குற்​றப்​பிரிவு காவல் ஆய்​வாளர் சு.​மால​தி,சென்னை க்யூ பிரிவு குற்​றப்​புல​னாய்​வுத்​துறை எஸ்ஐ நா.சதுரகிரி, திருச்சி தனிப்​பிரிவு எஸ்ஐ ரா.செந்​தில் குமார், சென்னை காவல் நுண்​ணறிவு பிரிவு (1) எஸ்ஐ சி.​பாஸ்​கர் என 17 பேருக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. மத்​திய அரசு வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில்​ இத்​தகவல்​ தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

SCROLL FOR NEXT