கோப்புப் படம்
ராமேசுவரம்: கச்சத்தீவு பகுதி மீதான பாரம்பரிய உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி, குடியரசு தினத்தன்று கச்சத்தீவுக்குச் சென்று இந்திய தேசியக் கொடியை ஏற்றுவோம் என்று காவிப் புலிப்படை கட்சி அறிவித்திருந்தது.
இதன்படி, கட்சித் தலைவர் புலவஞ்சி போஸ் தலைமையில் ஏராளமானோர் தஞ்சாவூரிலிருந்து ராமேசுவரத்துக்கு நேற்று வந்தனர்.
அவர்கள் நேற்று மதியம் ராமநாத சுவாமி கோயிலி்ல் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு அக்னி தீர்த்த கடற்கரைக்குச் சென்றபோது, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
பின்னர், காவிப் புலிப்படை கட்சியைச் சேர்ந்த 20 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், படகு மூலம் கச்சத்தீவு சென்றுவிடாமல் தடுக்க, விசைப்படகு துறைமுகத்தில் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.