காந்தி, அன்​பழகன், அருள்​முரு​கன்

 
தமிழகம்

புதுச்சேரியில் 2 அதிமுக, 1 பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுச்​சேரி தேர்​தலில் போட்​டி​யிடும் அதி​முக வேட்​பாளர்​கள் 2 பேர் அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர். மேலும், பாஜக சார்​பில் காரைக்​கால் தெற்கு தொகு​திக்​கான வேட்​பாள​ரும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளார்.

புதுச்​சேரி​யில் என்​டிஏ கூட்​ட​ணி​யில் 10 தொகு​தி​கள் பாஜக​வுக்கு அறிவிக்​கப்​பட்​டன. பாஜக சார்​பில் போட்​டி​யிம் 9 தொகு​தி​களுக்​கான வேட்​பாளர்​கள் நேற்று முன்​தினம் அறிவிக்​கப்​பட்​டனர். விடு​பட்ட ஒரு தொகு​தி​யான காரைக்​கால் தெற்கு தொகு​திக்​கான பாஜக வேட்​பாள​ராக அக்​கட்​சி​யின் மாநில தலைமை செய்தி தொடர்​பாளர் அருள்​முரு​கன் அறிவிக்​கப்​பட்​டுள்​ளார்.

          

புதுச்​சேரி​யில் என்​டிஏ கூட்​ட​ணி​யில் இடம் பெற்​றுள்ள அதி​முக​வுக்கு இரண்டு தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டன. உப்​பளம் தொகு​திக்கு மாநில செய​லா​ள​ரான முன்​னாள் எம்​எல்ஏ அன்​பழகன், உருளை​யன்​பேட்டை தொகு​திக்கு முன்​னாள் துணை செய​லா​ளர் காந்தி ஆகியோர் வேட்​பாளர்​களாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அறி​வித்​துள்​ளார்.

உப்​பளம் தொகுதி அதி​முக வேட்​பாளர் அன்​பழகன், கடந்த 2001-ம் ஆண்டு முதல் முறை​யாக போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார். தொடர்ந்து 2006, 2011, 2016 என நான்கு முறை தொடர்ந்து வெற்றி பெற்​றார். கடந்த 2021 தேர்​தலில் போட்​டி​யிட்ட இவர் வெற்றி வாய்ப்பை இழந்​தார். தற்​போது ஆறாவது முறை​யாக மீண்​டும் உப்​பளம் தொகு​தி​யில் அன்​பழகன்​ களம்​ இறங்​குகிறார்.

SCROLL FOR NEXT