தமிழகம்

போதைப்பொருளுக்கு எதிராக 1,810 கி.மீ. பைக் பேரணி: டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: போதைப்பொருளுக்கு எதி​ராக 5 மாநிலங்​கள் வழி​யாக 1,810 கி.மீ. பைக் பேரணியை டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால் சென்​னை​யில் தொடங்கி வைத்​தார்.

தேசிய ஒற்​றுமை தினத்தை முன்​னிட்​டு, “போதைப்​பொருளுக்கு எதி​ரான போராட்​டம்” என்ற கருப்​பொருளை மைய​மாக கொண்டு காவல் துறை​யினர் பங்​கேற்ற தேசிய பைக் பேரணி சென்னை மெரினா கடற்​கரை சாலை​யில் நேற்று நடந்​தது. இதை டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால் கொடியசைத்து தொடங்கி வைத்​தார்.

நிகழ்ச்​சி​யில், கூடு​தல் டிஜிபி-க்​கள் சங்​கர், தினகரன், மத்​திய போதைப்​பொருள் தடுப்பு பிரிவு ஐ.ஜி. சுதாகர் உள்​ளிட்ட உயர் போலீஸ் அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர்.

சென்​னை​யில் தொடங்​கிய இந்த பேரணி ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, கர்​நாட​கா, மகா​ராஷ்டிரா மற்​றும் குஜ​ராத் ஆகிய 5 மாநிலங்​களை கடந்து செல்​கிறது. மொத்​தம் 14 நாட்​கள் 1,810 கிலோ மீட்​டர் தூரத்​துக்கு இந்த பேரணி நடை​பெற உள்​ளது.

நிகழ்ச்​சி​யில், டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால் பேசி​ய​போது, 'தமிழகத்​தில் இந்த ஆண்​டில் இது​வரை 12,595 வழக்​கு​கள் போதைப்​பொருள் தொடர்​பாக பதிவு செய்​யப்​பட்டு 18 ஆயிரம் பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

23 ஆயிரம் கிலோ கஞ்சா, 10 லட்​சத்​திற்​கும் மேல் போதை மாத்​திரைகள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன’’ என்​றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT