தமிழகம்

வார கடைசி நாளையொட்டி 1,805 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்: போக்குவரத்து துறை அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ​வார இறுதி நாளை​யொட்டி 1,805 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்​கப்பட உள்​ள​தாக போக்​கு​வரத்து துறை அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து வெளி​யிடப்​பட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: வார விடு​முறை நாட்​களில் சென்​னை​யில் இருந்து பிற மாவட்​டங்​களுக்கு பயணிக்​கும் மக்​கள் நலன் கருதி போக்​கு​வரத்​துத் துறை மூல​மாக தினசரி இயக்​கப்​படும் பேருந்​துகளு​டன் கூடு​தலாக சிறப்பு பேருந்​துகள் இயக்க முடி​வெடுக்​கப்​படு​கிறது.

அதன்​படி, சென்னை கிளாம்​பாக்​கத்​தில் இருந்து திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி, கோயம்​புத்​தூர், சேலம், ஈரோடு, திருப்​பூர் ஆகிய இடங்​களுக்கு இன்று 430 பேருந்​துகளும், நாளை 465 பேருந்​துகளும் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

அதே​போல், சென்னை கோயம்​பேட்​டில் இருந்து திரு​வண்​ணா​மலை, நாகை, வேளாங்​கண்​ணி, ஓசூர். பெங்​களூரு ஆகிய இடங்​களுக்கு இன்​றைய தினம் 110 பேருந்​துகளும், நாளை 110 பேருந்​துகளும் இயக்​கப்​படும்.

மேலும், பெங்​களூர், திருப்​பூர், ஈரோடு மற்​றும் கோயம்​புத்​தூர் ஆகிய இடங்​களி​லிருந்து பல்​வேறு இடங்​களுக்கு 200 சிறப்பு பேருந்​துகளும் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. மாதவரத்​தி

லிருந்து இன்​று, நாளை கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கும்​பகோணம், வேலூர், ஓசூர் மற்​றும் புதுச்​சேரி ஆகிய இடங்​களுக்கு ஒவ்​வொரு நாளும் 80 சிறப்பு பேருந்​துகள் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

மேலும், ஞாயிறுக்​கிழமை சொந்த ஊர்​களில் இருந்து சென்​னை, பெங்​களூர் திரும்ப வசதி​யாக பயணி​களின் தேவை​கேற்ப அனைத்து இடங்​களி​லிருந்​தும் அன்​றைய தினம் 410 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும்.

இந்த வார இறு​தி​யில் சொந்த ஊர் செல்ல இன்​றைய தினம் 8,570 பயணி​களும், நாளை 3,158 பயணி​களும் மற்​றும் ஞாயிற்​றுக்​கிழமை 8,953 பயணி​களும் பயணம் மேற்​கொள்ள முன்​ப​திவு செய்​துள்​ளனர்.

இந்த எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்க வாய்ப்பு உள்​ள​தால் தொலை​தூர பயணம் மேற்​கொள்ள இருக்​கும் பயணி​கள் கூட்ட நெரிசலை தவிர்க்​கும் பொருட்டு தங்​களது பயணத்​துக்கு www.tnstc.in மற்​றும் டிஎன்​எஸ்​டிசி மொபைல் செயலி மூலம் முன்​ப​திவு செய்து பயணிக்க கேட்​டுக்​கொள்​கிறோம்​.

SCROLL FOR NEXT