இந்து சமய அறநிலையத் துறை 
தமிழகம்

இந்து சமய அறநிலையத் துறையில் இணை ஆணையர்கள் 18 பேர் பணியிட மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: இந்து சமய அறநிலை​யத் துறை​யில் 18 இணை ஆணை​யர்​கள் பணி​யிட மாற்​றம் செய்யப்பட்டுள்ளனர். 3 துணை ஆணை​யர்​களுக்கு பதவி உயர்வு வழங்​கப்​பட்​டுள்​ளது.

இது​தொடர்​பாக அறநிலை​யத் துறை செயலர் ராஜாராமன் வெளி​யிட்​டுள்ள உத்​தர​வு: மதுரை துணை ஆணை​யராக இருந்த ஆர்.பொன்​சுவாமிநாதன், அழகர்​கோவில் கள்​ளழகர் கோயில் இணை ஆணை​யராகவும், திரு​வல்​லிக்​கேணி பார்த்​தசா​ரதி கோயில் துணை ஆணை​யராக இருந்த சி.நித்யா, திருத்​தணி சுப்​பிரமணி​யசுவாமி கோயில் இணை ஆணை​யராகவும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். திண்​டுக்​கல் துணை ஆணை​யராக இருந்த மொ.அன்​னக்​கொடி, மயி​லாப்​பூர் கபாலீசுவரர் கோயில் இணை ஆணை​யராக மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

இதேபோன்று, ஏற்​கெனவே இணை ஆணை​யர்​களாகப் பணி​யாற்றி வரும் அதி​காரி​கள் பலரும் பல்​வேறு மாவட்​டங்​களுக்கும் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். வேலூர் இணை ஆணை​யர் பா.விஜயா சென்னை மண்​டலம்-1 இணை ஆணை​யராகவும், திரு​வண்​ணா​மலை இணை ஆணை​யர் அ.இரா. பிரகாஷ், ரங்​கம் அரங்​கநாதசுவாமி கோயில் இணை ஆணை​யராகவும், ராமேசுவரம் ராம​நாதசுவாமி கோயில் இணை ஆணை​யர் என்.சுரேஷ், மதுரை மீனாட்சி சுந்​தரேஸ்வரர் கோயில் இணை ஆணை​யராகவும் பணி​யமர்த்​தப்​பட்​டுள்​ளனர்.

ரங்​கம் கோயில் இணை ஆணை​யர் எஸ்.சிவ​ராம்​குமார், தஞ்​சாவூர் இணை ஆணை​யராகவும், மதுரை இணை ஆணை​யர் சி.மாரியப்​பன், ராமேசுவரம் கோயில் இணை ஆணை​யராகவும் மாற்​றப்​பட்​டுள்​ளனர். சேலம், நெல்லை, திண்​டுக்​கல், திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், சென்னை மண்​டலம்-3, உட்​பட மொத்​தம் 18 இணை ஆணை​யர்​கள் பணி​யிட மாறுதல் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT