தமிழகம்

எழும்பூரில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் 17 ரயில்கள் மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் மறுசீரமைப்பு பணி​கள் காரண​மாக, கடற்கரை - செங்​கல்​பட்டு தடத்​தில் 17 மின்​சார ரயில்​களின் சேவை​யில் இன்று மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.

சென்னை எழும்​பூர் நிலை​யத்​தில் ரூ.735 கோடி​யில் மறுசீரமைப்பு பணி நடந்து வரு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக பிரம்​மாண்ட நடை மேம்​பாலம் அமைக்​கும் பணி 10, 11-வது நடைமேடைகளில் தொடங்​கப்​பட்​டது.

          

இதன் காரண​மாக, கடந்த பிப்​.19-ம் தேதி முதல் புறநகர் மின்​சார ரயில் சேவை​களின் எண்​ணிக்கை குறைக்​கப்​பட்​டது. மின்​சார ரயில்​கள் 10, 11-க்கு பதிலாக 5, 6-வது நடைமேடைகளில் இயக்​கப்​பட்​டன.

தாம்​பரம் - கடற்​கரை மார்க்​கத்​தில் சேத்​துப்​பட்​டில் இருந்து எழும்​பூர் செல்​லும்​போதும், மறு​மார்க்​கத்​தில் பூங்கா ரயில் நிலை​யத்​தில் இருந்து எழும்​பூருக்கு செல்​லும்​போதும் ரயில்​கள் மெது​வாக இயக்​கப்​பட்​டன.

தினசரி ரயில் சேவை​கள் எண்​ணிக்கை 204-ல் இருந்து 115 ஆக குறைக்​கப்​பட்​டது மற்​றும் தாமத​மான இயக்​கம் காரண​மாக ஒரு மாதத்​துக்​கும் மேலாக பயணி​கள் கடும் அவதி​யடைந்​தனர். இரவில் பணிகள் இந்த நிலை​யில், 42 நாட்​களுக்​குப் பிறகு, புறநகர் மின்​சார ரயில்​கள் இயக்​கம் கடந்த 3-ம் தேதி சீரானது.

வழக்​க​மான அட்​ட​வணைப்​படி, வழக்கம்​போல 10, 11-வது நடைமேடைகளில் மின்​சார ரயில்​கள் இயக்​கப்​பட்​ட​தால், பயணி​கள் மிக​வும் மகிழ்ச்சி அடைந்​தனர். எனினும், 10, 11-வது நடை மேடைகளில் பணி இன்​னும் நிறைவடைய​வில்​லை.

படிக்​கட்​டு​கள், எஸ்​கலேட்​டர், குடிநீர் வசதி​கள் இருந்​த​போ​தி​லும், தற்​காலிக ஏற்​பா​டாக ஆங்​காங்கு மட்​டுமே மேற்​கூரை அமைக்​கப்​பட்​டுள்​ளது. சாய்​வுதளம் அமைப்​ப​தற்​கான பணி​கள் இரவில் மேற்​கொள்​ளப்​பட்​டு, விரை​வில் முடிக்​கப்​படும் என்று அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதன் காரண​மாக, கடற்​கரை-தாம்​பரம் இடையே 8 ரயில்​களின் சேவை நேற்று மாற்​றம் செய்​யப்​பட்​டது. கடற்​கரை - செங்​கல்​பட்டு மார்க்​கத்​தில் 3 மின்​சார ரயில்​களும், திரு​மால்​பூர் - கடற்​கரை மார்க்​கத்​தில் ஒரு ரயிலும் பகுதி ரத்து செய்​யப்​பட்​டன.

இதன் தொடர்ச்​சி​யாக, 17 ரயில்​களின் சேவை​யில் இன்று மாற்​றம் செய்​யப்பட உள்​ளது. அதன்​படி, கடற்​கரை - தாம்​பரத்​துக்கு இன்​றும், நாளை​யும் (ஏப்​.6, 7) அதி​காலை 5.50, இரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள் ரத்து செய்​யப்​படு​கின்​றன.

கூடு​வாஞ்​சேரி - கடற்​கரைக்கு இரவு 9.45, 10.10, 11.15 மணிக்கு இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள், தாம்​பரம் - கடற்​கரை இடையே பகுதி ரத்து செய்​யப்​படு​கின்​றன.

திரு​மால்​பூர் - கடற்​கரைக்கு இரவு 8 மணி, செங்​கல்​பட்டு - கடற்​கரைக்கு இரவு 10.20, 11.00 மணிக்கு இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள், தாம்​பரம் - கடற்​கரை இடையே பகுதி ரத்து செய்​யப்பட உள்​ளன.

ஏப்​. 6, 7, 8-ம் தேதி​களில் கடற்​கரை - செங்​கல்​பட்​டுக்கு அதி​காலை 3.50, 4.15 மணிக்கு இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள், கடற்​கரை - தாம்​பரம் இடையே பகுதி ரத்து செய்​யப்​படு​கின்​றன.

இதுத​விர, 5 மின்​சார ரயில்​கள் புறப்​படும் நேரம் மாற்றி அமைக்​கப்​பட்​டுள்​ளது. இத்​தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT