தமிழகம்

மின்சார வாரியத்தில் 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார் உறுதி

செய்திப்பிரிவு

சென்​னை: தமிழ்​நாடு மின்​ வாரி​யத்தில் 300 உதவி பொறி​யாளர்​களுக்கு செயற்​பொறி​யாளர்​களாக பதவி உயர்வை வெளிப்​படை தன்​மை​யுடன் வழங்க நடவடிக்கை மேற்​கொண்ட அமைச்​சர் நிர்மல் குமாருக்கு பொறி​யாளர்​கள் சார்​பில் நன்றி தெரிவிக்​கும் நிகழ்ச்சி அண்ணா சாலை​யில் உள்ள மின்​வாரிய தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இதில், மின்​வாரிய தலை​வர் ராதாகிருஷ்ணன் உள்​ளிட்ட உயர் அதி​காரி​கள் மற்​றும் பொறி​யாளர்​கள் கலந்​து​கொண்​டனர். நிகழ்ச்​சிக்கு பின்​னர் அமைச்​சர் கூறிய​தாவது: மின்​சார வாரி​யத்​தில் 15 ஆண்​டு​களுக்​கும் மேலாக உதவிப் பொறி​யாளர்​களாக பணிபுரிந்​து, பதவி உயர்வு கிடைக்​காமல் சட்​டப் போராட்​டம் நடத்திவந்த 300 ஊழியர்​களுக்​கு, உடனடி​யாக செயற்​பொறி​யாளர்​களாக பதவி உயர்வு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதே​போல் மற்ற பிரிவு​களி​லும் நிலு​வை​யில் உள்ள பதவி உயர்வு பணி​கள் விரைந்து முடிக்​கப்​படும்.

பணிச்​சுமையை குறைக்​கும் வகை​யில், முதல்​கட்​ட​மாக 15 ஆயிரம் பணி​யாளர்​களை புதி​தாக வேலைக்கு எடுப்​ப​தற்​கான வரைவு அறிக்கை தயா​ராகி வரு​கிறது. முதல்​வரின் ஒப்​புதலுக்​குப் பிறகு, இந்த ஆண்​டிலேயே இந்​தப் பணி​யிடங்​கள் அனைத்​தும் தற்​காலிகப் பணி​யிடங்​களாக இல்​லாமல், அரசுப் பணி​யிடங்​களாக நிரப்​பப்​படும்.

தமிழகத்​தில் தற்​போது மின்​சா​ரத் தட்​டுப்​பாடு இல்லை. உபரி​யாக உள்ள மின்​சா​ரத்தை மத்​தியதொகுப்​புக்கு விற்று மின்​சாரவாரி​யம் வரு​வாய் ஈட்டி வரு​கிறது. சென்​னை​யில் நில​வும் லோ-வோல்​டேஜ், மின்​வெட்டு பிரச்​சினை​களுக்​கு, 20 ஆண்​டு​கள் பழமை​யான மின்​மாற்​றிகள், கம்பிகள் சேதமடைவதே காரணம். இதை சரிசெய்ய கூடு​தல் குழுக்​கள் அமைக்​கப்​பட்டு பழுதுசரிசெய்​யப்​படு​கிறது.

மேலும், ஒரு சில பகு​தி​களில் திட்​ட​மிட்டே மின்​சா​ரப் பெட்​டிகளில் உள்ள ஃபியூஸ் (Fuse) பிடுங்​கப்​பட்டு மின்​வெட்டு ஏற்​படுத்​தப்​படு​வது சிசிடிவி காட்​சிகள் மூலம் கண்​டறியப்​பட்​டுள்ளது. இது​போன்ற செயல்களில் ஈடு​படும் நபர்​கள் மீது சட்​டப்​பூர்வ நடவடிக்​கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது என்றார்.

SCROLL FOR NEXT