தமிழகம்

பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு திருப்பதிக்கு தினமும் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: பிரம்​மோத்​ஸவத்தை முன்​னிட்டு தமிழகத்​திலிருந்து திருப்​ப​திக்கு நாளை முதல் செப்​.30 வரை தின​மும் 150 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும் என போக்​கு​வரத்​துத் துறை தெரி​வித்​து உள்​ளது.

இது குறித்து அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் வெளி​யிட்ட அறிக்​கை: இந்த ஆண்டு திருப்பதி திரு​மலை​யில் பிரம்​மோத்​ஸவத் திரு​விழா நடை​பெற உள்​ளது.

இதை முன்​னிட்டு தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழகங்​கள் மூல​மாக சென்​னை, திருச்​சி, தஞ்​சாவூர், சேலம், கோயம்​புத்​தூர், மதுரை, காரைக்​குடி, கும்​பகோணம், நாகப்​பட்​டினம், செங்​கோட்​டை, புதுச்​சேரி, திருப்​பத்​தூர், திரு​வண்​ணா​மலை, காஞ்​சிபுரம், தாம்​பரம், கிருஷ்ணகிரி, தரு​மபுரி, அரூர் மற்​றும் ஓசூர் ஆகிய இடங்​களி​லிருந்து திருப்​ப​திக்​கும், திருப்​ப​தியி​லிருந்து மேற்​குறிப்​பிட்ட இடங்​களுக்​கும் நாளை முதல் செப்​.30 வரை பக்​தர்​களின் தேவைக்​கேற்ப தின​மும் 150 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்பட உள்​ளது.

திருச்​சி, தஞ்​சாவூர், சேலம், கோயம்​புத்​தூர், மதுரை, காரைக்​குடி, கும்​பகோணம், நாகப்​பட்​டினம், செங்​கோட்​டை, புதுச்​சேரி ஆகிய இடங்​களி​லிருந்து இயக்​கப்​படும் பேருந்​துகளுக்கு முன்​ப​திவு வசதி​ செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த சேவையை பக்​தர்​கள் பயன்​படுத்தி பயணம் மேற்​கொள்ள www.tnstc.in இணை​யதளம் மற்​றும் டிஎன்​எஸ்​டிசி செயலி மூலம் முன்​ப​திவு செய்து பயன்​பெறு​மாறு கேட்​டுக்​கொள்​ளப்​படு​கிறது.

SCROLL FOR NEXT