தமிழகம்

அடுக்குமாடி குடியிருப்புகளில் 15 வாக்குச்சாவடிகள்: அமைவிடங்களை அறிவித்தது தேர்தல் ஆணையம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் நகர்ப்​புறங்​களில் அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் அதி​கரித்து வரு​கின்​றன. இது​போன்ற குடி​யிருப்​பு​களில் வசிப்​போர் சிலர் வாக்​குச் ​சாவடிகளுக்கு சென்று வாக்​களிக்க தயக்​கம் காட்​டு​கின்​றனர். பல இடங்​களில் இது​போன்ற குடி​யிருப்​பு​களில் 500-க்​கும் மேற்​பட்ட வாக்​காளர்​கள் உள்​ளனர்.

          

அங்கு ஒரு வாக்​குச்​சாவடி அமைக்​கும் அளவுக்கு வாக்​காளர்​கள் இருப்​ப​தால், இது​போன்ற அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பு​களில் வாக்​குச்​சாவடிகளை அமைக்க தேர்​தல் ஆணையம் பல ஆண்​டு​களாக ஆலோ​சித்து வந்​தது.

அதன்​படி திரு​வள்​ளூர், சென்​னை, காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, மதுரை ஆகிய மாவட்​டங்​களில் இந்த தேர்​தலில் 15 வாக்​குச்​சாவடிகளை தேர்​தல் ஆணை​யம் அமைக்​கிறது. அதன் அமை​விடங்​களை​யும் தற்​போது அறி​வித்​துள்​ளது. அதன்​படி, மதுர​வாயல் தொகு​தி​யில் நெற்​குன்​றத்​தில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதி​காரி​கள் வசிக்​கும் தாய்ஷா (TAISHA) அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பிலும், அம்​பத்​தூர் தொகு​தி​யில் கொரட்​டூரில் உள்ள அலை​யன்ஸ் ஆர்​கிட் ஸ்பிரிங்ஸ் குடி​யிருப்​பில் 2 வாக்​குச்​சாவடிகளும், திரு​வொற்​றியூர் தொகு​தி​யில் எர்​ணாவூரில் உள்ள வீட்​டு​வசதி வாரிய அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பில் ஒரு வாக்​குச்​சாவடி​யும் அமைக்​கப்பட உள்​ளன.

மேலும் சென்னை ஆர்​.கே.நகர் தொகு​தி​யில் தண்​டை​யார்​பேட்டை இளைய தெரு​வில் உள்ள பிரின்ஸ் அபார்ட்​மென்​டில் 2 வாக்​குச்​சாவடிகள், வில்​லி

​வாக்​கம் தொகு​தி​யில் திரு​மங்​கலத்​தில் உள்ள கேந்​திரிய வித்​யாலயா பள்​ளி​யில், விரு​கம்​பாக்​கம் தொகு​தி​யில் கோயம்​பேட்​டில் உள்ள தெற்​காசிய போட்​டிகள் ஒருங்​கிணைப்​பாளர்​கள் குடி​யிருப்​பில் 2 வாக்​குச்​சாவடிகள், வேளச்​சேரி தொகு​தி​யில் டான்சி நகரில் உள்ள புனித ஆண்​டனி தொடக்​கப் பள்​ளி​யிலும் வாக்​குச்​சாவடி அமைக்​கப்பட உள்​ளன.

காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் ஸ்ரீபெரும்​புதூர் தொகு​தி​யில் மாங்​காட்​டில் உள்ள ஆதாம் குடி​யிருப்​பு, கீழ்​க​திர்ப்​பூரில் உள்ள வீட்​டு​வச​தித் துறை கட்​டிடவளாகம் ஆகிய​வற்​றில் வாக்​குச் ​சாவடிகள் அமைக்​கப்படஉள்​ளன. மேலும், செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் கீரப்​பாக்​கத்​தில் உள்ள நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரிய குடி​யிருப்​பில் 2 வாக்​குச்​ சாவடிகள், மதுரை மேற்கு தொகு​தி​யில் கோச்​சடை பகு​தி​யில் உள்ள சாந்தி சதன் அடுக்​கு​மாடிக் குடி​யிருப்பு ஆகிய 15 இடங்​களில் வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்பட இருப்​ப​தாக தேர்​தல் ஆணை​யம் தெரிவித்​துள்​ளது.

SCROLL FOR NEXT