தமிழகம்

திண்டுக்கல் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜர்

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: தேர்தல் வழக்கு தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார்.

2016 சட்டசபை தேர்தலின் போது மக்கள் நலக்கூட்டணி சார்பில், திண்டுக்கல்லில் பிப்ரவரி 22 ம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டதாக திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாவட்ட செயலாளர் செல்வராகவன், நகர செயலாளர் செல்வேந்திரன் மற்றும் கூட்டணிக்கட்சியினர் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம்- 2ல் நடைபெற்றுவந்தது.

இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி வைகோ தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கை நான்கு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

திண்டுக்கல் ஜே.எம்., 2 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சவுமியாமேத்யூ முன்னிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் செல்வராகவன் உள்ளிட்ட 12 பேர் நேரில் ஆஜராகினர். வழக்கை ஜனவரி 7 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT