தமிழகம்

இடைக்கால பட்ஜெட்: போக்குவரத்து துறைக்கு ரூ.13,062 கோடி

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,934 கோடி

செய்திப்பிரிவு

இடைக்​கால பட்​ஜெட்​டில் போக்​கு​வரத்து துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட இடைக்​கால பட்​ஜெட்​டில் கூறி​யிருப்​ப​தாவது:

கடந்த 5 ஆண்​டு​களில் ரூ.6,121 கோடி​யில் 12,087 புதிய பேருந்​துகள் கொள்​முதல் செய்ய நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. 3,673 பேருந்​துகளை புதுப்​பித்து இயக்க ரூ.374 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. ரூ.288 கோடி​யில் 380 பசுமை மின் பேருந்​துகள் பயன்​பாட்​டுக்கு கொண்​டு​வரப்​பட்​டுள்​ளன.

          

நகரங்​களை ஒட்​டிய ஊரக பகு​தி​களி​லும் போக்​கு​வரத்து சேவையை வழங்க சிற்​றுந்து திட்​டம் மீண்​டும் அறி​முகப்​படுத்​தப்​பட்டு 1,603 புதிய வழித்​தடங்​கள் விரி​வாக்​கப்​பட்​டுள்​ளன. போக்​கு​வரத்து கழகங்​களின் செயல்​பாட்​டுத் திறன், சேவை வழங்​கல் மற்​றும் நிதி​நிலை ஆகிய​வற்றை மேம்​படுத்​து​வதற்​காக ரூ.2ஆ​யிரம் கோடி​யில் ஊக்க நிதி​யம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. மகளிர் விடியல் பயண திட்​டத்​துக்கு ரூ.4ஆ​யிரம் கோடி​யும், மாண​வர்​கள் பேருந்​துப் பயண கட்​ட​ணம் திட்​டத்​துக்கு ரூ.1,782 கோடி​யும், டீசல் மானி​யத்​துக்கு ரூ.1,857 கோடி​யும் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இடைக்​கால பட்​ஜெட்​டில் போக்​கு​வரத்து துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

நெடுஞ்​சாலை துறை: நடப்​பாண்​டில் 253கி.மீ. சாலை​கள் ரூ.1,647 கோடி​யில் நான்கு வழித்தட சாலை​களாக அகலப்​படுத்த பணி​கள் நடக்கிறது. 1,168 தரைப்​பாலங்​கள் ரூ.2,064 கோடி​யில் உயர்​மட்ட பாலமாக கட்​டப்​பட்​டுள்​ளன. மேலும் ரூ.1,342 கோடி​யில் 42 உயர்​மட்ட பாலங்​களும், ரூ.2,184 கோடி​யில் 46 ரயில்வே மேம்​பாலங்​களும், ரூ.2,388 கோடி​யில் 30 புறவழிச்​சாலை பணி​களும் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. நெடுஞ்​சாலை துறைக்கு ரூ.21,132 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,934 கோடி

ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் நலத்​துறை அயோத்​தி​தாசப் பண்​டிதர் குடி​யிருப்பு மேம்​பாட்​டுத் திட்​டத்​தின்​கீழ் 5,281 உட்​கட்​டமைப்​புப் பணி​கள் ரூ.482 கோடி செல​வில் முடிக்​கப்​பட்​டுள்​ளன. 120 கிராம அறி​வு​சார் மையங்​கள் ரூ.117 கோடி​யில் கட்​டப்​பட்டு வரு​கின்​றன. தொல்​குடி திட்​டத்​தின்​கீழ், 908 அடிப்​படை உட்​கட்​டமைப்​புப் பணி​கள் மற்​றும் 6,685 பழங்​குடி​யினர் வீடு​களின் கட்​டு​மானப் பணி​கள் ரூ.450 கோடி​யில் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

அண்​ணல் அம்​பேத்​கர் அயலக உயர்​கல்வி திட்​டத்​தின்​கீழ், இது​வரை ரூ.160 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டு, 385 மாண​வர்​கள் பயன்​பெற்​றுள்​ளனர். அண்​ணல் அம்​பேத்​கர் தொழில்​கள் முன்​னோடிகள் திட்​டத்​தின்​கீழ் 4,948 ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின தொழில்​முனை​வோருக்கு ரூ.420 கோடி மானி​யம் வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த இடைக்​கால பட்​ஜெட்​டில் ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் நலத்​துறைக்கு ரூ.3,934 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

பிற்​படுத்​தப்​பட்​டோர், மிக​வும் பிற்​படுத்​தப்​பட்​டோர் மற்​றும் சீர்​மரபினர் மாண​வர்​களுக்கு கல்வி உதவித்​தொகை வழங்க ரூ.460 கோடி, மாண​வர் விடு​தி​களின் அடிப்​படை வசதி​களுக்கு ரூ.78 கோடி​யும் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளன. பிற்​படுத்​தப்​பட்​டோர், மிக​வும் பிற்​படுத்​தப்​பட்​டோர், சிறு​பான்​மை​யினர் நலத்​துறை ரூ.1,634 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

கூட்​டுறவு, உணவு மற்​றும் நுகர்​வோர் பாது​காப்பு துறைக்கு ரூ.17,068 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. கைத்​தறி மற்​றும் துணிநூல் துறைகைத்​தறி நெச​வாளர்​களுக்கு தொடர் வேலை​வாய்ப்பு வழங்கி வரும் வேட்டி சேலை வழங்​கும் திட்​டத்தை செயல்​படுத்த கடந்த 5 ஆண்​டு​களில் ரூ.3,021 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT