தமிழகம்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ - 844 மருத்துவ முகாம்களில் 13 லட்சம் பேர் பயனடைந்தனர்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழு​வதும் 21 வார​மாக நடை​பெற்ற 844 நலம் காக்​கும் ஸ்டாலின் சிறப்பு மருத்​துவ முகாம்​களில் 13 லட்​சம் பேர் பயன்​பெற்​றுள்​ளனர். தமிழகத்​தின் அனைத்து மாவட்​டங்​களி​லும் ‘நலம் காக்​கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்​துவ முகாமை முதல்​வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கி வைத்​தார்.

தமிழகம் முழு​வதும் மொத்​தம் 1,256 இடங்​களில் முகாம் நடை​பெறும் என்று அறிவிக்​கப்​பட்​டது. அதன்​படி, வாரம்​தோறும் சனிக்​கிழமை மட்​டும் நடந்து வந்த முகாம், தற்​போது வியாழக்​கிழமை​யும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடை​பெற்று வரு​கிறது.

இந்த முகாம்​களில் பொது மருத்​து​வம், பொது அறுவை சிகிச்​சை, இதயம், நுரை​யீரல், எலும்​பியல், நரம்​பியல், தோல், காது, மூக்​கு, தொண்​டை, மகப்​பேறு, இயன்​முறை மருத்​து​வம், பல், கண், மனநலம், குழந்​தைகள் நலம் ஆகிய மருத்​துவ சேவை​கள் மற்​றும் இந்​திய மருத்​து​வம் சார்ந்த ஆலோ​சனை​கள் சிறப்பு மருத்​துவ நிபுணர்​களைக் கொண்டு வழங்​கப்​படு​கின்​றன.

பரிசோதனை​கள் மட்​டுமின்​றி, முதல்​வரின் விரி​வான மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்​டத்​தின்​கீழ் பதிவு செய்​தல் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான அரசு அங்​கீ​கார சான்​றிதழ் வழங்​குதல் போன்ற சேவை​களும் வழங்​கப்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், 21-வது வார​மாக நேற்று முன்​தினம் 44 இடங்​களில் நடந்த முகாம்​களில் 65,147 பேர் பயனடைந்​தனர். இது​வரை 21 வார​மாக நடை​பெற்​றுள்ள 844 முகாம்​களில் 13 லட்​சம் பேர் பயன்​பெற்​றுள்​ளனர்​.

SCROLL FOR NEXT