தமிழகம்

9 மாணவர்களுக்கு வைர கம்மல், வைர மோதிரம்: தவெக விருது விழாவில் விஜய் வழங்கினார்

ம.மகாராஜன்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் விருது வழங்கும் விழாவில் 9 மாணவர்களுக்கு வைர கம்மல், வைர மோதிரத்தை கட்சியின் தலைவர் விஜய் பரிசாக வழங்கினார்.

தவெக சார்பில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து, பாராட்டி சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் விழாவுக்கு தலைமை தாங்கி மாணவர்களுக்கு பரிசு பொருட்கள், ஊக்கத்தொகை வழங்கினார்.

முதல்கட்டமாக 21 மாவட்டங்களை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிறப்பம்சமாக 9 மாணவர்களுக்கு வைர மோதிரம் மற்றும் வைர கம்மலை விஜய் பரிசாக அளித்தார்.

அந்தவகையில் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த சென்னை மாவட்டத்தை சேர்ந்த பிரதிக்ஷா, திருப்பூரை சேர்ந்த மகாலட்சுமி, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த தோஷிதா லட்சுமி ஆகியோருக்கு வைர கம்மலை விஜய் வழங்கி கவுரவித்தார்.

தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் 6 இடங்களை பிடித்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த தேவதர்ஷினி, சந்தியா, திண்டுக்கல் காவியஶ்ரீ , ஈரோடு கோபிகா, ராமநாதபுரம் காவியா ஜனனி, திருநெல்வேலி சஞ்சனா ஆயுஷ் ஆகியோருக்கு வைர மோதிரங்கள் வழங்கப்பட்டன. இதுதவிர நாங்குநேரியைச் சேர்ந்த மாணவன் சின்னத்துரைக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT