மேட்​டூர் அணை

 
தமிழகம்

மேட்​டூர் அணையில் விநாடிக்கு 12,000 கனஅடி நீர் டெல்டா பாசனத்துக்கு திறப்பு

செய்திப்பிரிவு

சேலம்: மேட்​டூர் அணை​யில் இருந்து கடந்த 1-ம் தேதி முதல் பாசனத்​துக்கு நீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. முதலில் விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி​யாக இருந்தநீர் திறப்பு, நேற்று முன்​தினம் மாலை​ விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி​யாக உயர்த்தப்பட்​டது.

இந்​நிலை​யில், விவ​சா​யிகள் கோரிக்கையை ஏற்று டெல்டா பாசனத்​துக்​கான நீர் திறப்பு நேற்று காலை முதல் விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. இதனிடையே, மேட்​டூர் அணைக்​கான நீர்​வரத்து விநாடிக்கு 9,709 கனஅடி​யில் இருந்​து, நேற்று விநாடிக்கு 9,512 கனஅடி​யாக குறைந்​தது.

எனினும், பாசனத்​துக்​கான நீர் திறப்பு நேற்று முன்​தினம் வரை குறை​வாக இருந்​த​தால், மேட்​டூர் அணை​யின் நீர் மட்​டம் 92.33 அடி​யில் இருந்​து, நேற்று 92.37 அடி​யாக அதி​கரித்​தது. இதே​போல், அணை​யின் நீர் இருப்பு 55.35 டிஎம்​சி-​யில் இருந்து நேற்று 55.40 டிஎம்​சி-​யாக உயர்​ந்​தது.

SCROLL FOR NEXT