தமிழகம்

அனுமதியின்றி செயல்பட்டு வந்த 12 மணல் யார்டுகளுக்கு ‘சீல்’ - செங்குன்றம் அருகே வருவாய்த் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

செய்திப்பிரிவு

செங்குன்றம்: செங்​குன்​றம் அருகே உள்ள மணல் யார்​டுகளில் கடற்​கரை மணல் ஆற்று மணலுடன் கலந்து விற்​கப்​படுவ​தாக கிடைத்த தகவலை​யடுத்து கனிம வளத்​துறை அமைச்​சர் டி.கே.பிரபு கடந்த நவ.16-ம் தேதி அதிரடி ஆய்வு நடத்​தினார்.

இதன் தொடர்ச்​சி​யாக 19 மணல் யார்​டுகளுக்கு வரு​வாய்த் துறை​யினர் `சீல்' வைத்​தனர். அதன் தொடர்ச்​சி​யாக, பொன்​னேரி கோட்​டாட்​சி​யர் மணி​யரசன் தலை​மையில் நேற்று முன்​தினம் கனிமவளம் மற்​றும் சுரங்​கத்​துறை உதவி இயக்​குநர் ராமஜெயம், பொன்​னேரி வட்​டாட்​சி​யர் ஜெய்​கர்​பிரபு உள்​ளிட்​டோர் அடங்​கிய குழு​வினர் பாடியநல்​லூர், நார​வாரி​குப்​பம், புள்​ளிலைன், வடகரை, அழிஞ்​சிவாக்​கம் மற்​றும் கிராண்ட்​லைன் ஆகிய பகுதி​களில் உள்ள மணல் யார்​டுகளில் கூட்​டாக ஆய்வு மேற்​கொண்​டனர்.

இந்த ஆய்​வில், 12 யார்​டுகள் அனுமதி​யின்றி செயல்​பட்டு வந்​ததோடு, கலப்​பட மணலை விற்​பனை செய்து வந்​தது தெரிய​வந்​தது. இதையடுத்து, அந்த 12 மணல் யார்​டுகளில் இருந்த ஆற்​றுமணல், கடற்​கரை மணல், எம்-சாண்ட், கலப்​பட மணல், ஜல்​லிக் கற்​கள் உள்​ளிட்ட 6,950 டன் கனிமங்​களை அதி​காரி​கள் கைப்​பற்​றினர்.

தொடர்ந்து, 12 மணல் யார்​டுகளுக்கு வரு​வாய்த் துறை அதிரடி​யாக, `சீல்’ வைத்​தனர். மேலும், 12 மணல் யார்​டுகள் மீதும் சட்​டப்​படி நட​வடிக்கை எடுக்​கப்​படும் என அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT