தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பரிந்துரைக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் 
தமிழகம்

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமனை நியமிக்க ஆளுநருக்கு பரிந்துரை

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமனை நியமிக்குமாறு ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகி உள்ளதாக கூறப்படுகிறது. தனது ராஜினாமா முடிவை தமிழக முதல்வரிடம் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை தனக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறி உள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமனை நியமிக்க ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT