சென்னை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் 25,585 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு இதுவரை 23,241 பேர் டெங்கு பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் அக்டோபர் 13-ம் தேதி 118 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. டெங்குவை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. மாநகராட்சி மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் மருத்துவர்கள் போதிய அளவில் உள்ளனர்.