சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக நாளை திங்கள்கிழமை (டிச.4) ஒருநாள் மட்டும் சனிக்கிழமை நேர அட்டவணையின் படி ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில்கள் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், நாளை (டிச.4) மிக்ஜாம் (MICHAUNG) புயல் காரணமாக தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்ததை தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை நேர அட்டவணையின் படி இயக்கப்படும்.
புயல் மற்றும் கனமழையின் காரணமாக நாளை (டிச.4) தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம். அவசிய தேவை உள்ளவர்கள் மட்டும் பாதுகாப்பாக பயணம் செய்யுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.