தமிழகம்

சென்னையில் 11 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: காவல் ஆய்வாளர்கள் 11 பேரை பணி​யிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​விட்​டுள்​ளார்.

சென்னை காவல் துறை​யில் விருப்​பத்​தின் அடிப்​படை​யிலும், நிர்​வாக வசதிக்​காக​வும், பணி​யில் ஒழுங்​கீன​மாக இருந்​தா​லும் ஆய்​வாளர்​கள் அவ்​வப்​போது பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்டு வரு​கின்​றனர்.

இதன்​படி, சென்னை பெருநகர காவல் துறை​யில் 11 ஆய்​வாளர்​களை பணி​யிட மாற்​றம் செய்து மாநகர காவல் ஆணை​யர் அமல்​ராஜ் நேற்று உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார்.

இதில் முக்​கிய​மாக செம்​பி​யம் குற்​றப்​பிரிவு ஆய்​வாளர் ராதாகிருஷ்ணன் ஓட்​டேரி சட்​டம்​-ஒழுங்கு பிரிவுக்​கும், துரைப்​பாக்​கம் சட்​டம் - ஒழுங்கு பிரிவு ஆய்​வாளர் எஸ்​.பிரபு எழும்​பூர் குற்​றப்​பிரிவுக்​கும், நுண்​ணறி​வுப் பிரிவு ஆய்​வாளர் விமல் துரைப்​பாக்​கம் சட்​டம் - ஒழுங்கு பிரிவுக்​கும் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

காத்​திருப்​போர் பட்​டியலில் வைக்​கப்​பட்​டிருந்த மகேஷ் குமாருக்கு மீனம்​பாக்​கம் குற்​றப்​பிரி​வும், மோகன்​தாஸுக்கு கோட்​டூர்​புரம் சட்​டம்​-ஒழுங்கு பிரி​வும் வழங்​கப்​பட்​டுள்​ளது.

பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்ட 11 காவல் ஆய்​வாளர்​களும், ஓரிரு நாட்​களில் புதிய பொறுப்​பை ஏற்பார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT