சென்னை: மார்ச் மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்க அரசு உறுதியளித்ததை தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை நிர்வகித்து வரும் இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள், மருத்துவ உதவியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, திமுகவின் தொழிற்சங்கமான தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர், பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுத்தனர். சென்னையில் டி.எம்.எஸ். வளாகத்திலிருந்து, முதல்வர் இல்லம் நோக்கி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
இதையடுத்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் மூன்று நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு எட்டப்பட்டுள்ளது. இதையடுத்து போராட்டம் வாபஸ் பெற்றதாக சங்கச் செயலாளர் இருளாண்டி தெரி வித்தார்.