புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 442 பேர் 514 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. மாலையில் இப்பணி முடிந்தாலும் 17 இடங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றும் பணி நேற்று முன்தினம் இரவு வரை நீடித்தது. ஏ மற்றும் பி படிவங்கள் இல்லாததால் காங்கிரஸ், திமுகவினர் மனுக்களும் சில இடங்களில் தள்ளுபடியானது.
மொத்தமுள்ள 30 தொகுதிகளில் பெறப்பட்ட 514 மனுக்களில் 411 மனுக்கள் ஏற்கப்பட்டு, 103 மனுக்கள் தள்ளுபடியானது. வேட்பு மனுக்களை இன்று (மார்ச் 26) வாபஸ் பெறலாம். இன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப் பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறும்.