கோவி.செழியன்
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவன எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, 2017 மே 19-ம் தேதி போராட்டம் நடைபெற்றது. இதன் ஓராண்டு நிறைவையொட்டி கதிராமங்கலத்தில் காவல் துறையினரின் தடையை மீறி 2018 மே 19-ம் தேதி கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கோவி.செழியன், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் டி.ஆர்.லோகநாதன் உட்பட 29 பேர் மீது பந்தநல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தஞ்சாவூரில் உள்ள எம்.பி. எம்எல்ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் போதிய சாட்சியங்கள் சமர்பிக்காததால், வழக்கிலிருந்து கோவி.செழியன், பெ.மணியரசன், த.ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். மீதமுள்ளவர்கள் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.