தமிழகம்

கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கு கூலி, அகவிலைப்படி 10 சதவீதம் உயர்வு

அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

செய்திப்பிரிவு

சென்னை: கைத்தறி நெசவாளர் கூட்​டுறவுச் சங்​கங்​களின் உறுப்​பினர்​களுக்கு வழங்​கப்​படும் அடிப்​படைக் கூலி மற்​றும் அக​விலைப்​படியை 10 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டுள்​ளது.

இது​குறித்த அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக சட்​டப்​பேரவை​யில் 2026-27-ம் ஆண்​டுக்​கான கைத்​தறி மற்​றும் துணிநூல் துறை மானியக் கோரிக்​கை​யின் போது, நெசவாளர்​களின் வாழ்​வாதா​ரத்தை மேம்​படுத்​தும் வகை​யில் பல்​வேறு முக்​கிய அறி​விப்​பு​கள் வெளி​யிடப்​பட்​டது.

அப்​போது, கைத்​தறி, துணிநூல் மற்​றும் கதர்த் துறை அமைச்​சர் விஜய் பாலாஜி, “தொடக்க கைத்​தறி நெசவாளர் கூட்​டுறவுச் சங்​கங்​களின் உறுப்​பினர்​களுக்கு வழங்​கப்​படும் அடிப்​படைக் கூலி​யில் 10 விழுக்​காடும், அக​விலைப்​படி​யில் 10 விழுக்​காடும் உயர்த்தி வழங்​கப்​படும்” என்ற அறி​விப்பை வெளி​யிட்​டிருந்​தார்.

இந்த அறி​விப்​பைச் செயல்​படுத்​தும் வித​மாக, நெசவாளர் கூட்​டுறவுச் சங்க உறுப்​பினர்​களின் நலனைக் கருதி தற்​போதைய அடிப்​படைக் கூலி​யில் 10 சதவீத உயர்​வும், அக​விலைப்​படி​யில் 10 சதவீதமும் உயர்த்தி வழங்​கப்​படும்.

இந்த அறி​விப்பு கடந்த செப். 1-ம் தேதி முதல் முன் தேதி​யிட்டு நடைமுறைப்​படுத்​தப் படும். இதன்​மூலம் மாநிலம் முழு​வதும் உள்ள 74,000 கைத்​தறி நெசவாளர்​கள் நேரடி​யாகப் பயனடைவார்​கள். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT