பொதுவாக கூட்டத்தின் போக்குக்கு எதிர்த்திசையில் பயணிப்பது என்பது எப்போதுமே எளிதானதல்ல. ஆனால், பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, மற்றவர்கள் பயந்து ஒதுங்கும் துறைகளில் துணிச்சலாக இறங்கி முதலீடு செய்வதே ‘கான்ட்ராரியன் முதலீடு’ (Contrarian Investing) என்று அழைக்கப்படுகிறது.
சந்தையின் தற்காலிக பதற்றத்தைப் பயன்படுத்தி, நீண்டகால அடிப்படையில் பெரும் லாபத்தை ஈட்ட விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. பங்குச் சந்தை எப்போதும் அனைத்து பங்குகளுக்கும் சரியான விலையை நிர்ணயிப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட துறையோ அல்லது நிறுவனமோ சில நேரங்களில் பின்னடைவை சந்திக்கும்போது, அதன் உண்மையான மதிப்பைவிட விலை மிகவும் கீழே இறங்கி விடுகிறது.
குறிப்பாக, சர்வதேச சந்தை மாற்றங்கள் அல்லது வட்டி உயர்வு, அரசு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள், திடீரென விதிக்கப்படும் வரிகள் அல்லது புதிய விதிமுறைகள், நிறுவனத்தின் வருவாய்-லாபம் குறைதல் உள்ளிட்ட சில காரணங்களால் இதுபோன்ற சூழல் ஏற்படும். இத்தகைய நிலையை அடையாளம் காண்பதுதான் கான்ட்ராரியன் முதலீட்டாளர்களின் முக்கியமான பணி.
பெரும்பாலான முதலீட்டாளர்கள் அண்மையில் நடந்த கசப்பான அனுபவங்களை மட்டுமே மனதில் கொண்டு, அந்த நிலைமை எப்போதும் தொடரும் என்ற அச்சத்தில் பங்குகளை விற்கத் தொடங்குவார்கள். ஆனால், திறமையான ஒரு கான்ட்ராரியன் முதலீட்டாளர், நிறுவனத்தின் தற்காலிகப் பிரச்சினையை அதன் நிரந்தர வீழ்ச்சியில் இருந்து பிரித்துப் பார்த்து, உண்மையான வாய்ப்புகளைக் கண்டறிவார்.
கான்ட்ராரியன் உத்தியில் மிகப்பெரிய முதலீடே ‘பொறுமை’ தான். நீங்கள் சந்தைப் போக்குக்கு எதிராக முதலீடு செய்யும்போது அது சாதகமாக மாறுவதற்கு சில ஆண்டுகள் கூட ஆகலாம். ஆரம்பத்தில் உங்கள் முதலீட்டு முடிவு தவறோ என்று எண்ணத் தோன்றும்.
அந்த அளவுக்குப் பங்கின் விலை மேலும் மேலும் குறையக் கூடும். ஆனால், பொருளாதார சுழற்சி தலைகீழாக மாறி, பிற முதலீட்டாளர்கள் மீண்டும் அந்தப் பங்குகளை நோக்கி ஓடி வரும்போதுதான் அதற்கான முழுமையான பலனும், பல மடங்கு லாபமும் கைகூடும்.
நீண்ட கால முதலீட்டு நோக்கம் கொண்டவர்களுக்கும், சந்தையின் தற்காலிகப் பயத்தை விட நிறுவனத்தின் அடிப்படை வலிமையை நம்புபவர்களுக்கும் 'ஐசிஐசிஐ புருடென்ஷியல் கான்ட்ரா ஃபண்ட்' (ICICI Prudential Contra Fund) மிகவும் பொருத்தமானது.
இதன் என்எப்ஓ செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 12 வரை திறந்திருக்கும். பங்குகளின் மதிப்பு, கடன் அளவு, நிறுவன உரிமை, எதிர்கால வளர்ச்சிக்கான சாத்தியம் மற்றும் மாற்றங்களை எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றில் கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, சந்தையின் போக்கில் மாற்றம் ஏற்படும்போது அதிகபட்ச லாபத்தை ஈட்ட இந்த திட்டம் வழிவகை செய்கிறது.
- ஜி. மாரிமுத்து - நிர்வாக இயக்குநர், எம்எம் ஃபின்சர்வ்
கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள்/பரிந்துரைகள் இந்த பிராண்டின் முழு பொறுப்பாகும்.