எந்த கட்டுமானத்துக்கு எந்த சிமென்ட்..! - விலை அதிகமாக இருந்தால் தரமானதா?

வீடு கட்டும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்
எந்த கட்டுமானத்துக்கு எந்த சிமென்ட்..! - விலை அதிகமாக இருந்தால் தரமானதா?
Updated on: 
3 min read

வீடு கட்டுவது என்பது பெரும்பாலான குடும்பங்களின் வாழ்நாள் கனவு. பல ஆண்டுகள் சேமித்த பணத்தைக் கொண்டு கட்டப்படும் அந்த வீட்டில், பயன்படுத்தப்படும் ஒவ்வொரு கட்டுமானப் பொருளும் தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

அதில் மிக முக்கியமான கட்டுமானப் பொருட்களில் ஒன்று சிமென்ட். ஆனால் சிமென்ட் வாங்கச் செல்லும்போது, ‘எந்த நிறுவனத்தின் சிமென்ட் நல்லது?’ என்று மட்டுமே கேட்பது வழக்கமாகிவிட்டது.

உண்மையில் அதற்கு முன்பு நாம் கேட்க வேண்டிய கேள்வி, ‘எந்த வகையான சிமென்ட் நமது கட்டுமானத்துக்குப் பொருத்தமானது?’ என்பதுதான். ஏனெனில் இந்தியாவில் சிமென்ட் என்பது ஒரே வகையான பொருள் அல்ல. வெவ்வேறு தேவைகளுக்காக வெவ்வேறு வகையான சிமென்ட்களுக்கு இந்திய தரநிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்திய தரநிலை அமைவனம் (BIS) வெளியிட்டுள்ள தற்போதைய தகவல்படி, இந்தியாவில் பல்வேறு தேவைகளுக்கான 16 வகையான சிமென்ட்களுக்கு தனித்தனி தரநிலைகள் உள்ளன. அவற்றில் பொது வாகக் கட்டுமானத் துறையில் அறியப்படும் ஓபிசி (Ordinary Portland Cement), பிபிசி (Portland Pozzolana Cement) , பிஎஸ்சி (Portland Slag Cement), Composite Cement ஆகியவற்றுடன், குறிப்பிட்ட தொழில்நுட்பப் பயன்பாடுகளுக்கான பல சிறப்பு வகைகளும் உள்ளன.

இதில், பிபிசி சிமென்ட்டானது ப்ளை ஆஷ் மற்றும் கேல்சின்டு கிளே அடிப்படையில் இரண்டு வகையாக கிடைக்கிறது. இதுதவிர, மேசனரி சிமென்ட், ஹை அலுமினா சிமென்ட், சூப்பர் சல்பேட்டட் சிமென்ட்,ஒயிட் போர்ட்லாண்டு சிமென்ட் என பல்வேறு வகையிலான சிமென்ட்கள் கிடைக்கின்றன.

இவ்வாறான ஒவ்வொரு சிமென்ட்டும் சாதாரண வீடு கட்டுவதற்காக உருவாக்கப்பட்டது அல்ல என்பது தெளிவாகிறது. சில சிமென்ட்கள் குறிப்பிட்ட தொழில்துறை அல்லது சிறப்பு பொறியியல் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in