வாழ்க்கையின் முக்கிய சம்பவங்கள் எதுவுமே நமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வருவதில்லை. பிள்ளைகளின் உயர் கல்வி, திருமணம், கனவு இல்லம் கட்டுதல், ஓய்வுக்கால வாழ்க்கை என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கால அவகாசமும், நிதி இலக்குகளும் தேவைப்படுகின்றன.
நீண்டகால நோக்கில் செல்வத்தைப் பெருக்குவதற்குப் பங்குகள் (Equities) மிகவும் நம்பகமான கருவியாகப் பார்க்கப்படுகிறது. இருந்தாலும் அதில் உள்ள ஏற்ற இறக்கங்கள் தேவைப்படும் நேரத்தில் ஆபத்தானதாக மாற வாய்ப்புள்ளது.
பங்கு முதலீட்டிலிருந்து மிக விரைவாக வெளியேறினால், கிடைக்கக்கூடிய வளர்ச்சி வாய்ப்புகளை இழக்க நேரிடும். அதேநேரம், இலக்கை நெருங்கும் நேரத்தில் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டு தாமதமாக வெளியேறினால் அதுவரை ஈட்டிய லாபம் முழுமையாகக் காணமல்போகக் கூடும்.
பங்குகளில் உள்ள முதலீட்டைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து மறுசீரமைப்பு செய்வது பெரும்பான்மையான முதலீட்டாளர்களுக்குச் சாத்தியமில்லாத ஒன்றாகவே உள்ளது.
முதலீட்டாளர்கள் சந்தையில் தவறான முடிவுகளை எடுப்பதற்கு மனிதனின் மனோபாவமே முக்கியக் காரணமாக அமைகிறது. சந்தையில் சிறிய சரிவைக் கண்டவுடனேயே பயந்துபோய் நஷ்டத்தில் விற்பது என்பது மனிதனின் இயல்பான மனநிலை. அதேபோன்றுதான், மற்றவர்கள் பங்குகளை விற்கிறார்கள் என்பதற்காகத் தானும் பங்குகளை விற்று சந்தையிலிருந்து வெளியேறுவதும்.
மேலும், தற்போதைய சந்தைச் சரிவே தொடரும் எனக் கருதி, குறைந்த விலையில் விற்றுவிட்டு, சந்தை மீண்டும் உச்சம் தொட்ட பிறகு அதிக விலைக்கு வாங்குவதும் ஒருவித மனித மனோபாவமே. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குகிறது ‘கிளைடு பாத்’ உத்தி. குறிப்பாக, இந்த வகை மனோவியல் சிக்கல்களுக்குச் சிறந்த தீர்வாக விளங்குவது ‘லைஃப் சைக்கிள்’ திட்ட நிதிகள்.
இதில் முதலீட்டாளர்கள் சந்தையைக் கணித்துச் செயல்பட வேண்டிய அவசியமில்லை. இலக்கின் தொடக்கக் காலத்தில், ஏற்ற இறக்கங்களைச் சமாளிக்கப் போதுமான நேரம் இருப்பதால் பங்குச் சந்தையில் அதிக முதலீடு செய்யப்படும்.
இலக்கின் முதிர்வுக்காலம் நெருங்க நெருங்க, நிதி மேலாளர்கள் தானியங்கி முறையில் ஈக்விட்டி முதலீட்டைக் குறைத்து, கடன் பத்திரங்கள் போன்ற பாதுகாப்பான முதலீடுகளுக்குப் பணத்தை மாற்றுவர்.
ஒரே முதலீட்டு வடிவம் எப்போதும் அனைத்துச் சந்தைச் சூழலிலும் லாபம் தருவதில்லை. பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம், வெள்ளி என ஒவ்வொரு சொத்து மதிப்பும் வெவ்வேறு காலக்கட்டத்தில் சிறப்பான வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கும்.
இந்த அடிப்படையில், குறிப்பிட்ட கால இலக்குகளைக் கொண்ட முதலீட்டாளர்களுக்காக ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைப் சைக்கிள் பண்ட்ஸ் 2031, 2036 மற்றும் 2041’ ஆகிய என்எப்ஓ-க்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இலக்கு நெருங்கும்போது ‘கிளைடு பாத்’ உத்தி மூலம் ஈக்விட்டி மற்றும் டெப்ட் அளவைச் சீரமைக்கும்.
இந்த என்எப்ஓ திட்டங்களில் செப்டம்பர் 09, 2026 வரை முதலீடு செய்யலாம்.
கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள்/பரிந்துரைகள் இந்த பிராண்டின் முழு பொறுப்பாகும்.
- அனிதா மோகன், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்