என் மகன் மூன்றாம் ஆண்டு பி.ஏ., ஆங்கிலம் படித்து வருகிறார். சட்டம் தொடர்பான படிப்புகள் படிக்க ஆர்வமாக உள்ளார். வழக்கறிஞர் பணி தவிர வேறு பணி வாய்ப்புகள் பற்றிச் சொல்லுங்கள். சட்டப் படிப்புக்கு வெளிநாட்டில் பணி வாய்ப்பு உள்ளதா? - மு.முகிலன். பெரம்பூர், சென்னை.
பட்டப் படிப்பு முடித்துவிட்டுத் தாராளமாகச் சட்டப் படிப்பைப் படிக்கலாம். உங்களுக்காகச் சட்டப் படிப்பு பற்றிய ஒரு சிறிய தொகுப்பு: நாடுகளைப் பொறுத்து சட்டம் பயின்றவர்கள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். எடுத்துக் காட்டாக, ‘லாயர்’ என்பது சட்டம் பயின்றவர்கள் அனைவரையும் குறிக்கும் பொதுவான பெயர்.
‘அட்வ கேட்’ என்பவர்கள் பார் கவுன்சிலில் பதிவுசெய்து இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் வாதாடுபவர்கள். தென்னாப்ரிக்காவிலும் காமன்வெல்த் நாடுகளிலும் நீதிமன்றங்களில் வாதிடு பவர்களை ‘பாரிஸ்டர்’ எனக் கூறுவர். அது போலவே அமெரிக்காவில் நீதி மன்றங்களில் வாதிடுபவர்களை ‘அட்டர்னி’ என அழைப்பர். அடிப்படை யில் அனைவருமே சட்டம் பயின்றவர்களே.
சட்டப் படிப்பினை நல்லதோர் சட்டக்கல்லூரியில் பயின்றுவிட்டு நீங்கள் சட்டப் பணிகளை மேற்கொள்ள லாம். அதற்கான வாய்ப்புகள் குறித்த அறிமுகம்: பொதுவாகச் சட்டப் படிப்பினை முடித்துவிட்டு பார் கவுன்சிலில் பதிவு செய்து வழக்கறிஞராக ஒரு மூத்த வழக்கறிஞரின்கீழ் பணியைத் தொடங்குவர் அல்லது உரிய அனுபவம் பெற்றபின் பெரிய நிறுவனங்களில் கார்ப்பரேட் லாயராகத் தொடரலாம்.
அரசுத் தேர்வாணையம் நடத்தும் நீதித்துறைப் பணிகளுக் கான போட்டித் தேர்வினை எழுதிப் பணிவாய்ப்பு பெறலாம். போதிய அனுபவத்துடன் நிறுவனங்க ளுக்கு சட்ட ஆலோசகர் ஆகலாம். பத்திரிகைகள் அல்லது ஊடகங்களில் சட்டம் சார்ந்த பத்திரிகையாளராகவும் பணியாற்றலாம்.
இல்லையெனில் நண்பர்களுடன் சேர்ந்து ‘சட்ட நிறுவனம்’ தொடங்கலாம். முதுகலைப் பட்டம் பெற்றுவிட்டுச் சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணிக்குச் செல்லலாம். தற்போது புதிதாக வளர்ந்துவரும் ‘லீகல் டெக்னாலஜி - இன்னோ வேஷன்’ துறையிலும் பணி வாய்ப்புகள் இருக்கின்றன. அது மட்டுமன்றி லீகல் அன லிஸ்ட், லீகல் பிராசஸ் அவுட் சோர்சிங், ஆல்டர்நேடிவ் டிஸ்பியூட் செட்டில்மென்ட் ஆகிய பிரிவுகளில் வாய்ப்பினைப் பெறலாம்.
அடிப்படையாகச் சட்ட நுணுக்கங்களைப் பெற்று நிபுணத்துவத் துடன் இருப்பின் வாய்ப்புகள் இனிதே அமையும். சட்டத் துறையில் முதுகலைப் படிப்பினை நம் நாட்டிலும் வெளி நாடுகளிலும் படிக்கலாம். இங்கி லாந்தில் முதுகலைச் சட்டப்படிப்புகள் பற்றிய சிறிய அறிமுகம்: எல்.எல்.எம் படிப்பைப் பின்வரும் பிரிவுகளில் படிக்கலாம் (முழுமை யானதல்ல).
கிரிமினல் லா அண்ட் ஜஸ்டிஸ், கிரிமினல் லா அண்ட் கிரிமினல் ஜஸ்டிஸ், இன்டர்நேஷனல் ஹியூமன் ரைட்ஸ், ஹியூமன் ரைட்ஸ் லா, குளோபல் எனர்ஜி அண்ட் என்விரான் மென்டல் லா, இன்டலெக்சுவல் பிராபர்ட்டி லா, லா டேட்டா அண்ட் டெக்னாலஜி, இன்டர் நேஷனல் டிஸ்பியூட்ஸ், கமர்சியல் பேங்கிங் அண்ட் பைனான்ஸ், இன்டர்நேஷனல் பிசினஸ் லா ஆகிய பிரிவுகள் உள்ளன.
மேலும் இன்றைய வர்த்தக உலகில் கடல் வணிகம் மிகப்பெரிதாக நடை பெறுவதால் ‘மாரிடைம் லா’ இளைய தலைமுறையினரிடையே பிரபல மடைந்து வருகிறது.
இப்படிப்பை நம் நாட்டில் முதுகலைப் பட்டம் அல்லது முதுகலைப் பட்டயப் படிப்பாக இந்தியன் மாரிடைம் பல்கலைக்கழகங்கள், தெலங் கானாவில் உள்ள நல்சார், குஜராத் மாரிடைம் பல்கலைக்கழகங்கள் ஆகிய கல்வி நிறுவனங்களிலும் இங்கிலாந்தில் ‘குவீன் மேரி யுனிவர்சிட்டி ஆஃப் லண்டன், யுனிவர்சிட்டி ஆஃப் சௌதாம்ப்டன், சுவான்சீ யுனிவர்சிட்டி, எஸ்எக்ஸ் யுனிவர்சிட்டி, சிட்டி யுனிவர்சிட்டி ஆஃப் லண்டன், ஸ்டிராத்கிளைட் யுனிவர்சிட்டி போன்றவை வழங்கு கின்றன. ஆனால், இங்கே படிக்க அதிக செலவாகலாம். தங்களின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு முடிவெடுங்கள்.