கல்வி - வேலை வழிகாட்டி

பொறியியல் மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகை

Guest Author

பொறியியல் படிக்கும் மாணவிகளின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் செஃப்லர் இந்தியா ஹோப் பொறி யியல் கல்வி உதவித்தொகை (Schaeffler India Hope Engineering Scholarship Program) வழங்கப்படுகிறது.

2026-27 கல்வியாண்டுக்கான உதவித்தொகைக் கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப் படுகின்றன.

உதவித்தொகை விவரம்: தேர்வாகும் மாணவிகளுக்குக் கல்லூரிப் படிப்பின் நான்கு ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும். செஃப்லர் இந்தியா நிறுவனத்தின் துறைசார் நிபுணர்களின் வழிகாட்டுதலும், கல்வி, தொழில் வளர்ச்சியில் முன்னேற மாணவிகளுக்கு உதவிகளும் வழங்கப்படும்.

தகுதி: 2025–26 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு (அறிவியல் பிரிவு) தேர்வில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழக மாணியக் குழு அல்லது அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறி யியல் படிப்பில் இந்தியாவில் சேர்ந்திருக்க வேண்டும்.

மெக்கானிக்கல் இன்ஜீனியரிங், மெக்கட்ரானிக்ஸ் இன்ஜீனியரிங், எலக்ட்ரிக்கல் - எலக்ட்ரானிக்ஸ் இன்ஜீனியரிங், எலக்ட்ரானிக்ஸ் - கம்யூனிகேஷன் இன்ஜீனியரிங், புரொடக்‌ஷன் இன்ஜீனியரிங், இன்ஸ்ட்ருமென் டேஷன் இன்ஜீனியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜீனியரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி துறையைச் சேர்ந்த மாணவிகள் இந்தக் கல்வி உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு முன்னுரிமை உண்டு. இவர்கள் 12ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 40% மதிப் பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற் றோரின் ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தக் கல்வி உதவித்தொகையைப் பெற இணையவழியில் மட்டுமே விண்ணப் பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி சேர்க்கைச் சான்று, வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள், மாற்றுத்திறனாளி சான்றிதழ் (தேவைப்படுவோருக்கு) உள் ளிட்ட ஆவணங்களைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பத் தைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு: https://www.buddy4study.com/application/SIHE17/instruction

- நெ.லோகேஷ் (பயிற்சி இதழாளர்)

SCROLL FOR NEXT