கல்வி - வேலை வழிகாட்டி

புதிதாக அறிமுகமாகியுள்ள பட்டப் படிப்புகள் | வெற்றி உங்கள் கையில்

இரா.நடராஜன்

என் மகன் இப்போது பிளஸ் 2 படித்துவருகிறான். அதற்குப் பிறகு புதிதாக அறிமுகமாகியுள்ள ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் அவனைச் சேர்க்கலாம் என்று நினைக்கிறோம். தற்போது என்னென்ன புதிய படிப்புகள் அறிமுகமாகி யுள்ளன? அவற்றின் எதிர்காலம் எப்படி இருக்கும்? – காளியப்பன், சரவணம்பட்டி, கோவை.

வேலைவாய்ப்புச் சந்தையின் தேவைக்கு ஏற்ப, தொழில் நிறுவனங்களுடன் கல்வி நிறுவனங்கள் இணைந்தோ தனிப்பட்ட முறையிலோ புதிய படிப்புகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகின்றன.

இப்படிப்பட்ட படிப்புகளைப் பொறுத்தவரை அவற்றைப் படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களின் வரவேற்பு எப்படி உள்ளது என்பதைச் சில ஆண்டுகள் கழித்தே கணிக்க முடியும்.

மேலும், ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தைமையப்படுத்தி ஒரு படிப்பு அறிமுகப்படுத்தப் படும்போது, அந்தத் தொழில்நுட்பம் காலப் போக்கில் மேம்படாமல் போனாலோ வழக்கொழிந்து விட்டாலோ அந்தப் படிப்பைப் படித்தவர்களுக்கு வேலை கிடைப் பது பெரிதும் பாதிக்கப்படும்.

எடுத்துக்காட்டாக, 50 ஆண்டுகளுக்கு முன்பு பல கல்லூரிகள், கல்வி நிறுவனங்களில் வழங்கப் பட்ட பி.ஏ. பிலாசபி படிப்பு தற்போது பெரும்பாலான கல்வி நிறுவனங்களால் கைவிடப் பட்டுள்ளது.

எனவே அண்மைக் காலத்தில் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்கள், கல்லூரி களால் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று, நான்கு ஆண்டு பட்டப் படிப்புகளில் சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.

பி.சி.ஏ. கிளவுட் கம்ப்யூட்டிங், ஆர்டிஃபிஷி யல் இன்டெலிஜென்ஸ், மெஷின் லேர்னிங், டேட்டா அனலிடிக்ஸ் அண்டு சைபர் செக்யூ ரிட்டி, பி.எஸ்சி. காக்னிடிவ் கம்ப்யூட்டிங், பி.பி.ஏ. ஏஐ, சப்ளை செயின் அண்டு ஆபரேஷன்ஸ் மேனேஜ்மென்ட், பி.எஸ்சி. ஏஐ, அக்ரி டெக்னா லஜி அண்டு ஸ்மார்ட் ஃபார்மிங், பி.எஸ்சி.

ஏஐ இன் ஹெல்த்கேர் அண்டு பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ், பி.டெக். ரோபாட்டிக்ஸ், பி.டெக். பிசினஸ் டெக்னாலஜி, பி.எஸ்சி. ஃபாரென்சிக் சயின்ஸ், பி.எஸ்சி. ஃபாரென்சிக் பிசிக்ஸ் அண்டு பாலிஸ் டிக்ஸ், பி.எஸ்சி. ஹானர்ஸ் இன் கிளைமேட் சேஞ்ச் அண்டு சஸ்டெயினபிலிட்டி, பி.எஸ்சி. ஹானர்ஸ் இன் கிரீன் எனர்ஜி அண்டு ஹைட் ரஜன், பி.எஸ்சி. பயோமெடிக்கல் சயின்ஸ், பி.எஸ்சி. டெக்னிகல் டெக்ஸ்டைல்ஸ், பி.எஸ்சி. இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன், பி.எஸ்சி. எண்டாஸ்கோபி டெக்னாலஜி, பி.எஸ்சி. ஹெல்த் இன்ஃபர்மேட்டிக்ஸ், பி.எஸ்சி. ஹெல்த் இன்ஃபர்மேஷன் மேனேஜ்மென்ட், பி.எஸ்சி. பயோஸ்டாட்டிஸ்டிக்ஸ் அண்டு டெமோகிராபி, பி.எஸ்சி. ஏர்லைன் மேனேஜ் மென்ட்.

இவை தவிர, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் டாடா நிறுவனத்துடன் இணைந்து பி.எஸ்சி. எலெக்ட்ரானிக்ஸ் மேனுஃபேக்சரிங் படிப்பை வழங்குகிறது. நான்கு ஆண்டுப் பொறியியல் படிப்புகளில், ஐஐடி சென்னை, ஐஐடி கான்பூரில் பி.டெக். சைபர் செக்யூரிட்டி, ஐஐடி ஜம்மு பி.டெக். யூனிஃபைடு இன்ஜினீயரிங், ஐஐடி இந்தூர் என்விரான்மென்டல் எகனாமிக்ஸ் அண்டு சஸ்டெயினபிலிட்டி இன்ஜினீயரிங், அப்ளைடு அண்டு இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி, ஐஐடி ஜோத்பூர் பி.எஸ்சி. இன் மேதமேட்டிக்ஸ் அண்டு கம்ப்யூட்டிங், ஐஐடி மண்டி பி.டெக். இன் குவாண்டம் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், ஐஐடி மும்பை பி.எஸ்சி. இன் டிஜிட்டல் சயின்ஸ் அண்டு பிசினஸ் மேனேஜ்மென்ட் ஆகிய படிப்புகளை வழங்குகின்றன.

உங்கள் மகனின் ஆர்வம், உங்களின் நிதிநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

SCROLL FOR NEXT