உலகில் ஆங்கிலம் பேசுபவர்கள் மட்டுமே அறிவாளிகள் என்று ஏன் சொல்கிறார்கள்? அடிப்படையில் ஆங்கிலம் என்பது ஒரு மொழி, அவ்வளவுதான். எந்த மொழியையும் கற்பதால், அந்த மொழியில் கூறப்பட்டுள்ளதைப் படித்து அறிவைப் பெற முடியும்.
அறிவு என்பது அழிவு, துன்பம் வராமல் காக்கும் கருவி. அதேநேரம் மொழி, அறிவை வளர்க்கும் ஒரு கருவி மட்டுமே. தெரிந்தோ தெரியாமலோ ஆங்கிலம் உலக மொழியாகிவிட்டது.
பிரிட்டிஷ் அரசின் மெக்காலே என்கிற அறிஞரின் கல்விக் கொள்கைக்குப் பிறகு, இந்தியாவில் ஆங்கிலக் கல்வி முக்கியத் துவம் பெற்றது. இந்தியாவில் ஆங்கிலம் ஒரு கட்டாய மொழிப்பாடமாகிவிட்டது.
உலகில் ஆங்கிலம் பேசுபவர்கள் மட்டுமே அறிவாளிகள் என்று ஏன் சொல்கிறார்கள்? அடிப்படையில் ஆங்கிலம் என்பது ஒரு மொழி, அவ்வளவுதான். எந்த மொழியையும் கற்பதால், அந்த மொழியில் கூறப்பட்டுள்ளதைப் படித்து அறிவைப் பெற முடியும். அறிவு என்பது அழிவு, துன்பம் வராமல் காக்கும் கருவி. அதேநேரம் மொழி, அறிவை வளர்க்கும் ஒரு கருவி மட்டுமே.
தெரிந்தோ தெரியாமலோ ஆங்கிலம் உலக மொழியாகிவிட்டது. பிரிட்டிஷ் அரசின் மெக்காலே என்கிற அறிஞரின் கல்விக் கொள்கைக்குப் பிறகு, இந்தியாவில் ஆங்கிலக் கல்வி முக்கியத் துவம் பெற்றது. இந்தியாவில் ஆங்கிலம் ஒரு கட்டாய மொழிப்பாடமாகிவிட்டது.
தமிழ் நாட்டில் 1960-70களில் ஆங்கிலம் ஆறாம் வகுப்பில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது மூன்று வயதிலேயே ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்படுகி றது. ஆனால், அதை ஆசிரியர்கள் முழுமையாக வும் சரியான முறையிலும் கற்றுத் தர வேண்டும்.
ஒரு மொழியை எவ்வாறு அறிமுகப்படுத்து வது, எந்த முறையில் கற்பிப்பது என்பதற்கு ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அவசியம்.
1970களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங்கில ஆசிரியர்களுக்கு பெங்களூருவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் மாநிலங்களில் உள்ள பயிற்சி மையங்களில் இருந்த ஆசிரியர் களுக்கு அவர்கள் பயிற்சி அளித்தனர்.
தமிழ் நாட்டிலும் இது போன்ற எட்டு மையங்கள் செயல்பட்டன. அவற்றின் மூலம் ஆங்கிலம் கற்பிக்கும் முறை, மொழி நுணுக்கங்கள், மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வழிமுறைகள் ஆகிய வற்றில் பயிற்சி வழங்கப்பட்டது.
ஆனால், காலப்போக்கில் இம்மையங்கள் செயலிழந்ததால், ஆசிரியர்களுக்கான முறை யான பயிற்சியும் குறைந்தது. இதனால் சில இடங்களில் அடிப்படை இலக்கணம், உச்சரிப்பு உள்ளிட்டவற்றைக் கற்பிப்பதிலும் குழப்பம் ஏற்படுகிறது.
எனவே, ஆசிரியர்களைக் குறை கூறுவதைவிட, அவர் களுக்கான முறையான மொழிக் கற்பித்தல் பயிற்சியை மீண்டும் வலுப்படுத்துவது அவசியம்.
ஆங்கிலத்தில் ஓர் எழுத்து தனியாக உச்சரிக்கப்படும்போதும், அதே எழுத்து ஒரு வார்த்தையில் இடம்பெறும்போதும் வெவ்வேறு ஒலிகளைத் தரக்கூடும்.
C (சி) - cat (கே), catch (கே), caught (கா), cricket (கி), cheat (சீ), cherry (செ). ஆக, எழுத்தின் உச்சரிப்பும், அது வார்த்தையில் இடம்பெறும் போது கிடைக்கும் உச்சரிப்பும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், தமிழில் அப்படி அல்ல.
க - கடமை, கடன், காற்று, காரணம், கவிஞர். எழுத்தாக இருந்தாலும், வார்த்தையில் இடம்பெற்றாலும் ஒரே ஒலிதான். இந்த அடிப்படைப் புரிதல் இல்லாமல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலத்தைக் கற்பிப்பது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்.
கல்லூரிகளில் ஆங்கிலப் பாடம் படிக்கும் மாணவர் களுக்கு இதுபோன்ற நுணுக்கங்களைக் கற்பித்தால் போதுமானது. மொழிப்பாடத் தேர்வில் 100/100 மதிப்பெண் கள் வழங்குவதும் கேடு. அது மொழியின் வேறுபாட்டை அறியாமல் மொழி ஆளுமையைச் சிதைத்துவிடும். ஏனென்றால் மொழி கற்றல் என்பது வெறும் மனனம் செய்வது அல்ல!
- கட்டுரையாளர், மகிழ்நன், கல்வியாளர்.