‘நூறாண்டு காலம் வாழ்க…’ என்பது வெறும் வாழ்த்து மட்டுமல்ல; அதுவே எதிர்கால மருத்துவ உலகின் தாரக மந்திர மாகவும் மாறப்போகிறது.
உலக அளவில் முன்னணியில் உள்ள பெருநிறுவனங்கள், தங்களது ஊழியர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ ‘ஆரோக்கியமான முதுமையும் நீண்ட ஆயுளும்’ (Healthy Ageing and Longevity) தொடர்பான துறை நிபுணர்களை நியமிக்கத் தொடங்கியுள்ளன.
முன்னணி கல்வி நிறுவனங்கள்
புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு புரட்சிகரமான முறையைக் கண்டறிந்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மூலம் ஒருவரது ரத்த மாதிரியைப் பகுப் பாய்வு செய்து, அவரது உயிரியல் வயதைத் துல்லியமாகக் கண்டறிய முடியும்.
இதன்மூலம், அல்சைமர் போன்ற நோய்கள் ஒருவருக்கு வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, அவரது மூளையில் ஏற்படும் மாற்றங்களை ஏ.ஐ. கருவிகள் மூலம் கண்டறிந்துவிட முடியும்.
இதுபோல மனிதரின் நீண்ட ஆயுள் குறித்த ஆராய்ச்சியில் உலக அளவில் சில கல்வி நிறுவனங்கள் முன்னணி யில் உள்ளன. ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா காலேஜ் ஆஃப் லான் ஜெவிட்டி சயின்ஸ் (GCLS), 'லான் ஜெவிட்டி சயின்ஸ்' என்கிற துறை யைப் பிரத்யேகமாகக் கற்பிக்கும் முதன்மை நிறுவனம்.
இங்கு மருத்துவர்கள், உடற்பயிற்சி நிபுணர்களுக் கான சிறப்புப் படிப்புகள் வழங்கப் படுகின்றன. அமெரிக்காவில் உள்ள யு.எஸ்.சி. (USC) லியோனார்ட் டேவிஸ் பள்ளியில் முதுமையியல் (Gerontology) துறை யில் இளங்கலை முதல் பி.எச்டி படிப்புகள்வரை வழங்கப்படுகின்றன.
ஜப்பானின் கியோட்டோ, டோக்கியோ பல்கலைக்கழகங்கள் முதுமை தொடர்பான ஆராய்ச்சியில் முன் னோடியாக உள்ளன. அங்கு மூலக்கூறு நிலை (Molecular Level) அளவில் செல்கள் சிதைவடைவது (Cellular Senescence) குறித்து ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முக்கியப் படிப்புகள்
இந்தத் துறையில் சான்றளிக்கப் பட்ட நீண்ட ஆயுளுக்கான மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், உடற் பயிற்சி நிபுணர் போன்ற பல்வேறு நிபுணத்துவப் படிப்புகளைப் படிக்க லாம்.
எம்.பி.பி.எஸ்., எம்.டி. போன்று மருத்துவப் படிப்பு படித்தவர் மட்டுமன்றிப் பல்வேறு துறை சார்ந்தவர்களும் இத்துறையைத் தேர்வு செய்யலாம். நர்சிங், பிசியோதெரபி, உயிரியல், மரபியல், பயோடெக்னாலஜி, ஊட்டச்சத்து போன்ற படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு இத்துறை புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது.
வேலைவாய்ப்புகள்
வருங்காலத்தில் இந்தத் துறையில் நிபுணர்களுக்கு அதிகமான தேவை உருவாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. குறிப்பாக நீண்ட ஆயுள் தொடர்பான ஆலோசகர், ஆராய்ச்சியாளர் (Longevity Consultant, Longevity Researcher), ஏ.ஐ. உயிரியலாளர், நோய்த் தடுப்பு மருத்துவ நிபுணர் போன்ற பணிகளில் பணியாற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.
மனித ஆயுளை நீட்டிக்கும் நோக்கில் நடைபெறும் இந்த அறிவியல் ஆராய்ச்சிகள், எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் மட்டுமல்லாமல், உலகப் பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை என நிபுணர்கள் கருது கின்றனர்.
- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org