உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள் பொருளியலை மற்ற துறைகளுடன் எவ்வாறு இணைத்துக் கற்பிக்கின்றன, அந்தப் பாதையில் இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளன என்பதைப் பார்ப்போம்.
உலகளவில் பொருளியல்
பொதுவாக ஒரு மாணவர் ஒரு பட்டப்படிப்பை மட்டுமே பயில்வார். ஆனால், இரட்டைப் பட்டம் (Dual Degree) திட்டத்தின் மூலம், பயிலும் அதே காலத்தில் இரண்டு வெவ்வேறு பட்டங்களைப் பெற முடியும்.
எடுத்துக் காட்டாக, பொறியியல் படிக்கும் மாணவர் அதோடு பொருளியலையும் இணைத்துப் படிக்கலாம். உலகம் முழுவதும் பல்துறை அறிவுக்கு (Inter disciplinary Education) முக்கியத்துவம் அதிகரித்துவரும் நிலையில், முன்னணிப் பல்கலைக்கழகங்கள் இத்தகைய படிப்புகளை விரிவுபடுத்தி வருகின்றன.
சிங்கப்பூரின் நான்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU), பொறியியல், சமூக அறிவியல் துறைகள் இணைந்து வழங்கும் ஐந்தாண்டு இரட்டைப் பட்டப்படிப்பு, மாணவர் களுக்குத் தொழில்நுட்ப அறிவுடன் பொருளாதாரப் பார்வையையும் வளர்க்கிறது.
இதன் மூலம், ஒரு பொறியாளர் கட்டமைப்புகளை வடிவமைப்பது மட்டுமல்லாமல், அவை பொருளா தாரரீதியாகவும் சமூகரீதியாகவும் பொருத்தமானவையா என்பதை மதிப்பிடும் திறனையும் பெறுகிறார்.
இதன் முக்கியத்துவத்தை ஆஸ்தி ரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வும் சுட்டிக் காட்டுகிறது. உயர் நிர்வாகப் பொறுப்பு
களை ஏற்கவோ, தொழில்முனை வோராக உருவாகவோ விரும்பும் பொறியாளர்களுக்குப் பொருளியல் சார்ந்த அறிவு, போட்டி நிறைந்த வேலை வாய்ப்புச் சந்தையில் தனித்துவமான முன்னிலையை அளிக்கிறது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
எதிர்காலம் என்ன?
இந்தியாவிலும் இந்த மாற்றம் மெதுவாகத் தொடங்கியுள்ளது. பிட்ஸ் பிலானியில் பொருளியலில் முதுநிலை (எம்.எஸ்சி.), பொறியியலில் இளநிலை (பி.இ.) ஒருங்கிணைந்த இரட்டைப் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.
இதில் இடம்பெறும் நுண்ணியல் பொருளியல் (Microeconomics), பேரியல் பொருளியல் (Macroeconomics), விளையாட்டுக் கோட்பாடு (Game Theory) போன்ற பாடங்கள் சந்தை, விலை நிர்ணயம் போன்ற நடைமுறைச் சவால்களைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
அதேபோல், ஐஐடி மும்பை 2017 முதல் பொருளியலில் இளநிலை அறிவியல் (BS Economics) பட்டப் படிப்பை வழங்கிவருகிறது. மற்ற
பொறியியல் மாணவர்கள் பொரு ளியலைத் துணைப் பாடமாகத் தேர்வு செய்யலாம். தொழில்நுட்ப அறிவுடன் பொருளாதாரப் புரிதலும் அவசியம் என்கிற எண்ணத்தையே இந்த முயற்சிகள் பிரதிபலிக்கின்றன.
பொருளியலின் பயன்பாடு பொறியியல் துறையுடன் மட்டும் நின்று விடுவதில்லை. கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், பொதுக் கொள்கை எனச் சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் அது முக்கியத் தாக்கம் செலுத்துகிறது.
இதற்கு அமெரிக்காவின் ஸ்டான் ஃபோர்டு கல்வி சார்ந்த பட்டமேற்படிப்பு பள்ளியின் பேராசிரியர் எரிக் ஹானுஷெக் மேற்கொண்ட ஆய்வுகள் சிறந்த எடுத்துக்காட்டு.
ஆசிரியர்களின் திறன், கல்விக்கான முதலீடு, பள்ளிக் கொள்கைகள் ஆகியவற்றைப் பொருளியல் கருவிகளின் மூலம் ஆய்வு செய்த அவர், 2021ஆம் ஆண்டுக்கானயிடான் பரிசைப் (Yidan Prize) பெற்றார்.
எந்தக் கல்விக் கொள்கை மாண வர்களின் கற்றலை உண்மையில் மேம் படுத்துகிறது என்பதைத் தரவுகளின் அடிப்படையில் மதிப்பிடுவதே இத்தகைய ஆய்வுகளின் முக்கிய நோக்க மாகும்.
உலகப் பல்கலைக்கழகங்களின் அணுகுமுறை
உலகின் முன்னணிப் பல்கலைக் கழகங்கள், பொருளியலை ஒரு தனிப் பாடமாக மட்டுமல்லாமல், பல்துறை கல்வி யின் முக்கிய அங்கமாகவும் அணுகுகின்றன. அதனால், மாணவர்கள் ஒரே துறைக்குள் மட்டுமே நின்றுவிடாமல், பல்வேறு துறைகளின் அறிவை ஒருங்கிணைத்துக் கற்கும் வகையில் பாடத் திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
இதற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் ‘Philosophy, Politics and Economics’ (PPE) படிப்பு சிறந்த எடுத்துக் காட்டு. அதேபோல், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ‘Economics Tripos’, டோக்கியோ பல்கலைக்கழகத்தின் பரந்த அடிப்படைக் கல்வி முறை ஆகியவை மாணவர்கள் பல்வேறு கோணங்களில் சிந்திக்கவும், பல்துறை திறன்களை வளர்த்துக்கொள்ளவும் வழிவகுக்கின்றன.
இதே அணுகுமுறையை மாசசூ செட்ஸ் தொழில்நுட்பக் கழகம் இன்னும் விரிவுபடுத்தியுள்ளது. அங்கே பொருளி யலுடன் கணிதம், கணினி அறிவியல்,தரவு அறிவியல் ஆகியவற்றை இணைத்துப் பல்வேறு பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இதன் மூலம், மாணவர்கள் தங்களின் ஆர்வத்துக்கும் எதிர்கால வேலைவாய்ப்புத் தேவை களுக்கும் ஏற்ப கல்விப் பாதையைத் தேர்ந்தெடுக்க முடியும்.
இதற்கு மாறாக, இந்தியாவில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் பொருளியலுக்கான இளங்கலைப் பாடத்திட்டங்கள் பல ஆண்டுகளாகக் குறிப்பிடத்தக்க மாற்றமின்றித் தொடர்கின்றன.
காலத்துக்கு ஏற்ப நவீன பாடங்கள், பல இடங்களில் இடம்பெற வில்லை. துணைப் பாடம் அல்லது பல்துறை கற்றலுக்கான வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளன.
உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்ப முன்னேற்றம், உலக ளாவிய பொருளாதார மாற்றங்கள், வேலைவாய்ப்புச் சந்தையின் தேவைகள் ஆகியவற்றுக்கு ஏற்ப பாடத்திட்டங் களைத் தொடர்ந்து புதுப்பித்துவரும் நிலையில், இந்தியாவின் உயர்கல்வி அமைப்பும் அந்தத் திசையில் வேகமாக முன்னேற வேண்டிய தேவை உள்ளது.
- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org