தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் திட்ட இயக்குநர். நான் பதினோராம் வகுப்புப் படிக்கிறேன். எனக்குப் பொறியியல் / மருத்துவம் படிக்க விருப்பமில்லை. ஆனால், ஆர்கிடெக்சர், டிசைனிங் அல்லது இதழியல் படிக்க விரும்புகிறேன். நான் ஒரு ‘கிரியேட்டிவ் பெர்சன்’. அதனால் இதில் ஏதாவதொரு படிப்பைப் படிக்கலாமா அல்லது வானிலையியல் படிக்கலாமா எனத் தெளிவுபடுத்துங்கள். - நகுலா கார்த்திகேயன், மதுரை
நீங்கள் படைப்பூக்கத் திறன் பெற்றவர் (கிரியேட்டிவ் பெர்சன்) எனக் கூறுவதால் உங்களுக்கு ஆர்கிடெக்சர், டிசைனிங் அல்லது இதழியல் பொருத்தமாக இருக்கலாம். இப்படிப்புகள் குறித்துச் சில தகவல்கள்: ஆர்கிடெக்சர் படிப்பில் சேரப் பின்வரும் நுழைவுத் தேர்வுகளை எழுதலாம். NATA (நேஷனல் ஆப்டி டியூட் டெஸ்ட் ஃபார் ஆர்கி டெக்சர்) தேர்வை கவுன்சில் ஆஃப் ஆர்கிடெக்சர் (COA) நடத்துகிறது.
‘JEE Arch’ தேர்வில் தேர்ச்சி பெற்றால் பி.ஆர்க்., பி.பிளான்., படிப்புகளை ஐ.ஐ.டி.கள், என்.ஐ.டிகள், எஸ்.பி.ஏ. (ஸ்கூல் ஆஃப் பிளானிங் - ஆர்கிடெக்சர்) போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்கலாம். பி.பிளானிங் படிப்பை அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), ஸ்கூல் ஆஃப் பிளானிங் அண்ட் ஆர்கிடெக்சர் (புது டெல்லி), சி.இ.பி.டி. பல்கலைக்கழகம் (அகமதாபாத்), ஐ.ஐ.டி. கரக்பூர், அன்சால் பல்கலைக்கழகம், அமிட்டி பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்கலாம்.
பி.டிசைன் படிப்பில் சேர ஐ.ஐ.டி. பாம்பே நடத்தும் UCEED தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றால் ஐ.ஐ.டி. பாம்பே, ஐ.ஐ.டி. குவாஹாட்டி, ஐ.ஐ.டி. டெல்லி, ஐ.ஐ.டி. ஹைதராபாத் போன்ற கல்வி நிறுவனங்களில் சேரலாம்.
NID - DAT (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் ஆப்டிடியூட் டெஸ்ட்) தேர்வில் தேர்ச்சி பெற்றால் அக்கல்வி நிறுவனத்தின் அகமதாபாத், பெங்களூரு வளாகங்களிலும் இதர டிசைன் கல்வி நிறுவனங்களிலும் சேரலாம். இவை தவிர NIFT (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டிசைன்) போன்று பல கல்வி நிறுவனங்கள் தனியே அவர்களின் சேர்க்கைக்காக நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன.
CUET தேர்வின் மூலம் மத்திய - மாநில அரசுக் கல்வி நிறுவனங்களின் டிசைன் படிப்புகளில் சேரலாம். அது போலவே AIEED தேர்வில் தேர்ச்சி பெற்று இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்கிடெக்சர் - டிசைன் நிறுவனத்தில் படிக்கலாம். SEED தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் சிம்பயாசிஸ் யுனிவர்சிட்டியின் டிசைன் படிப்பில் சேரலாம்.
காலணிகளுக்கான பெருமைமிகு கல்வி நிறுவனமான ஃபுட்வேர் டிசைன் அண்ட் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட் (FDDI) - சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, நொய்டா உள்பட நாடு முழுவதும் 12 நகரங்களில் பெரிய கல்வி நிறுவனங்களை அமைத்துள்ளது. இதில் சேர AIST தேர்வினை (ஆல் இந்தியா செலக்ஷன் டெஸ்ட்) எழுதித் தேர்ச்சி பெற வேண்டும்.
ஆர்கிடெக்சர், டிசைனிங் ஆகிய படிப்புகளை அடுத்து நீங்கள் குறிப்பிட்டுள்ள இதழியல் தொடர்பான படிப்புகளைப் படிக்க பி.ஜே.எம்.சி. (பேச்சலர் ஆஃப் ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்), பி.ஏ. ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன், பி.ஏ. மீடியா ஸ்டடிஸ், பி.ஏ. சினிமா வித் விஷுவல் கம்யூனிகேஷன், பி.எஸ்சி. அட்வர்டைஸ்மென்ட், பி.ஏ. கார்பரேட் கம்யூனிகேஷன், பி.பி.ஏ. அட்வர்டைஸ்மென்ட், பி.எஸ்சி. எலக்டிரானிக்ஸ் மீடியா சயின்ஸ் போன்ற படிப்புகளைப் படிக்கலாம் அல்லது பட்டப் படிப்பை முடித்துவிட்டு இதழியலில் முதுகலை/முதுகலை டிப்ளமோ படிக்கலாம்.
சில கல்வி நிறுவனங்கள் காலநிலை அறிவியலில் முதுகலைப் படிப்பை வழங்கு கின்றன. ஆர்வமிருந்தால் இளங் கலை அல்லது முதுகலை மெடியரோலஜி / அட்மாஸ்ஃபெரிக் சயின்ஸ் படிப்புகளைப் படிக்கலாம். முதுகலைப் படிப்பை கொச்சின் யுனிவர் சிட்டி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்
னாலஜி, சாவித்திரி பாய் பூலே புணே பல்கலைக்கழகம் ஆகியவற்றோடு இணைந்து சில கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. நீங்கள் குறிப்பிட்டது போல அனைத்து விருப்பப் பாடப்பிரிவு களுக்கு என ஒரு சிறிய விவரத் தொகுப்பு மேலே அளிக்கப்பட்டுள்ளது. ஆராய்ந்து முடிவெடுங்கள்.