கல்வி - வேலை வழிகாட்டி

மாணவர்கள் கல்லூரியை நேசிக்கத் தொடங்கும்போது...

கா.கார்த்திகேயன்

கல்லூரிப் படிப்பை முடிக்கும் தறுவாயில் உயர்ந்த இலக்கு களையும் எதிர்பார்ப்புகளையும் மனதில் கொண்டு வேலை வாய்ப்பை நோக்கிச் செல்லும் இளைஞர்கள் ஒரு பக்கம் இருக்க, மறுபுறம் தங்கள் பிள்ளைகள் சிறந்த கல்வி பெற்று நல்ல வருமானத்துடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை அடைய வேண்டும் என்கிற கனவுடன் இருக்கும் பெற்றோர்கள் உள்ளனர். இந்த இரு தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் இணைக்கும் முக்கியத் தளமாக கல்லூரிகள் விளங்குகின்றன.

முக்கிய அம்சம்

இன்றைய தலைமுறையினர் கல்லூரியைத் தேர்வுசெய்வதில் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்படு கின்றனர். முன்பெல்லாம் கல்வித் தரம், ஆசிரியர் திறன், ஒழுக்கம் போன்ற அம்சங்களே முக்கியமாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது வளாக நேர்காணல்கள் (Campus Interviews) மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்பு முக்கியமான தீர்மானக் காரணியாக மாறியுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு பல கல்லூரிகள் வேலைவாய்ப்புத் துறைகளை அமைத்து, சிறப்பு அலுவலர் களை நியமித்து, தனித்த பயிற்சி அளித்து உள்ளூர் - பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தர முயல்கின்றன.

வளாக நேர்காணல்

இன்றைய வேலைவாய்ப்புச் சூழலில், கல்லூரி - தொழில் துறை இணைப்பை வலுப்படுத்தும் முக்கியத் தூணாக முன்னாள் மாணவர்கள் உருவெடுத்துள்ளனர். தாங்கள் பணி புரியும் நிறுவனங்களுடன் கொண்டி ருக்கும் நெருங்கிய தொடர்புகளைப் பயன்படுத்தித் தங்கள் கல்லூரிக்கு நிறுவனங்களை அழைத்துவருவதில் முன்னாள் மாணவர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

நேர்காணல் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதோடு கல்லூரியின் திறமையை நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தும் நம்பகமான பாலமாகவும் அவர்கள் செயல்படு கின்றனர்.

மேலும், ‘referral’ முறைமை இன்றைய ஆள்தேர்வு நடைமுறையில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், தங்கள் நிறுவனங்களில் உள்ள காலியிடங்களைக் கல்லூரி மாணவர்களுக்கு முன்னுரிமையுடன் முன்னாள் மாணவர்கள் பகிர்ந்து கொண்டு, தகுதியான மாணவர்களைப் பரிந்துரைப்பதன் மூலம் வேலை வாய்ப்பு பெறும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றனர்.

வழிகாட்டியாக…

கல்லூரி மாணவர்களுக்கு நேர் காணல் முன் தயாரிப்பு, ரெஸ்யூம் உருவாக்கம், ஆப்டிடியூட் தேர்வுத் தயாரிப்பு போன்றவற்றிலும் முன்னாள் மாணவர்கள் நேரடியாக வழிகாட்டு கின்றனர். இவ்வாறு அவர்கள் வழங்கும் முன்னோடியான ஆதரவு, மாணவர்களின் தன்னம்பிக் கையையும் தேர்ச்சி விகிதத்தையும் உயர்த்துகிறது.

ஒரு மாணவன் தனது கல்வி நிலையத்துடன் உள்ள உறவைப் பட்டம் பெற்ற நாளோடு முடித்துவிடாமல், தொடர்ந்து அதை வளர்ச்சியின் ஒரு பகுதியாகக் கருதும் தருணத்திலேயே அவர் ஒரு சிறந்த முன்னாள் மாணவ ராக மாறத் தொடங்குகிறார்.

தன்னை உருவாக்கிய கல்வி நிலையத்துக்குத் திருப்பித் தர வேண்டும் என்கிற எண்ணம் உருவாகும்போது, அந்த மாற்றம் வலுவாக வெளிப்படுகிறது. ஒருவரிடம் ‘சிறந்த முன்னாள் மாணவராக’ மாற வேண்டும் என்கிற எண்ணம் எப்போது உருவாகிறது என்கிற கேள்வி முக்கியமானது.

மாணவர்கள் மீது பேராசிரியர்கள் வெளிப்படுத்தும் அணுகுமுறை, அவர்களின் மனநிலையில் நேரடியாகத் தாக்கம் செலுத்துகிறது. ஊக்குவிப்பு, அன்பு, வழிகாட்டுதல் ஆகியவை மாணவர்களிடம் நம்பிக்கையையும் நெருக்கத்தையும் உருவாக்கு கின்றன. இத்தகைய நேர்மையான அனுபவங்கள், அந்தக் கல்வி நிலை யத்துடன் பின்னர் இணைந்திருக்கும் விருப்பமாக மாறுகின்றன.

கல்லூரிப் பருவத்தில் ஏற்படும் சிறு குழப்பங்களை நினைவில் கொள்ளாமல், அங்கு பயின்றுகொண்டிருக் கும் நமது நண்பர்களை நல்வழிப் படுத்துவதில் பெரும் பங்காற்ற வேண்டும்.

எந்தக் கல்லூரி அல்லது கல்வி நிறுவனம் முன்னாள் மாணவர்களையும் இந்நாள் மாணவர்களை யும் இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறதோ அந்தக் கல்லூரி அல்லது கல்வி நிறுவனம் வளாக நேர்காணல் களின்போது தன்னிகரில்லா இடத்தைத் தக்கவைக்கும் என்பது நிதர்சனம்.

- கட்டுரையாளர், மேலாண்மை துறைப் பேராசிரியர்; karthikeyan-mba@saranathan.ac.in

SCROLL FOR NEXT