நான் பி.எஸ்சி. இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறேன். வானிலை, காலநிலை மாற்றம் குறித்துப் படிக்க ஆர்வமாக இருக்கிறேன். அதற்கான வேலைவாய்ப்புகள் உள்ளனவா? அது தொடர்பான குறுகிய காலப் படிப்புகள் ஏதேனும் உள்ளனவா? - அறிவுச்செல்வன், காரைக்கால்.
இன்றைய காலக்கட்டத்தில் வானிலை, காலநிலை மாற்றம் குறித்த படிப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த் துள்ளன. மேலும், இவை ஐ.நாவின் நிலைத்த வளர்ச்சி இலக்குகளில் (SDG-Sustai nable Development Goals) முக்கிய அங்கம் வகிக்கின்றன. ஐ.நா.வின் வழிகாட்டுதல்படி அனைத்து நாடுகளும் முக்கிய முன்னெடுப்புகளை எடுத்துவருகின்றன.
நீங்கள் பட்டப் படிப்புக்குப் பின்னர் எம்.எஸ்சி. கிளைமெட் சயின்ஸ் அண்ட் பாலிசி, எம்.எஸ்சி. கிளைமெட் சேஞ்ச் & சஸ்டெயினபிலிட்டி, எம்.எஸ்சி. என்விரான்மென்டல் சேஞ்ச் & சஸ்டெயினபிலிட்டி, எம்.எஸ்சி.
மெட்டியராலஜி, எம்.எஸ்சி. மெட்டிய ராலஜி & ஓசனோகிராபி, எம்.எஸ்சி. அட்மாஸ்ஃபெரிக் சயின்ஸ் போன்ற படிப்புகளை நாட்டின் முக்கியப் பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன.
இத்துறையின் முக்கியத்துவம் கருதிநிபுணத்துவம் பெற்றவர்களை உரு வாக்கும் பொருட்டு ‘கிரீன் ஃபெல்லோஸ்’ என்கிற வகையில் கிளைமெட் சேஞ்ச் அண்ட் சஸ்டெயினபிலிட்டியில் முது கலைப் பட்டயப் படிப்பை தமிழ்நாடு அரசு வழங்குகிறது.
குறிப்பிட்டுள்ள இப்படிப்பு களில் ஏதேனும் ஒன்றை முடித்துவிட்டு அரசுத் துறைகள், பன்னாட்டு நிறுவ னங்கள், அரசு சாரா பன்னாட்டு அமைப்பு கள், அரசு சாரா உள்ளூர் அமைப்புகள் போன்றவற்றில் பணி வாய்ப்பு பெறலாம்.
இ.எஸ்.ஜி. பயிற்சிகள்
அதுபோலவே, தற்போது அனைத்துத் தொழில்துறை நிறுவனங்களிலும் தங்களின் பணியாளர்களுக்கு - அடி மட்டப் பணியாளர் முதல் மேல்நிலை மேலாளர்கள் வரை - இ.எஸ்.ஜி. (ESG – Environmental, Social, Governance) பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இப் பொருள் குறித்துப் பயிற்சியாளர்களாக விரும்புவோருக்குப் பல்வேறு குறுகிய கால, நீண்ட காலப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அவற்றில் சிலவற்றைக் காண்போம். புரொஃபெஷனல் சர்டிஃபிகேஷன் இன் என்விரான்மென்டல், சோஷியல், கவர்னன்ஸ் - இதனை மத்திய அரசின்கீழ் செயல்படும் ஓர் அமைப்பு வழங்குகிறது.
தொழில் நிறுவனங்களின் உயர் அலுவலர் களுக்காக ஐ.ஐ.எம். ஒன்று இ.எஸ்.ஜி. பயிற்சி வழங்குகிறது. நம் நாட்டின் என்.எஸ்.இ. அகாடமி, இ.எஸ்.ஜி., இ.எஸ்.ஜி. அறக்கட்டளை என இரண்டு பிரிவுகளில் முறையே 33 மணி நேரம், 27 மணி நேரம் கொண்ட படிப்புகளை வழங்குகிறது.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கார்ப்பரேட் அஃபேர்ஸ் தொழில்முறைப் படிப்பாக சி.எஸ்.ஆர்., இ.எஸ்.ஜி. குறித்த படிப்புகளை 'ஸ்வயம்' (swayam.gov.in) தளம் வழியே வழங்குகிறது.
இந்த ஆறு மாதப் படிப்பு, முழுக்க முழுக்க இணைய வழியில் வழங்கப்படுகிறது. பொதுவாக ஹெச்.ஆர்., தொழில்சார் சி.எஸ்.ஆர். பணியாளர்கள், வங்கி அலுவலர்கள் ஆகியோருக்கு இது பொருத்தமாக இருக்கும்.
மேலும், ஐ.ஐ.எம். பெங்களூரு 12 வாரப் படிப்பை 'ஸ்வயம்' தளம் மூலமாக வழங்குகிறது. இதைத் தவிர, சர்டிஃபிகேட் கோர்ஸ் இன் கார்ப்பரேட் இ.எஸ்.ஜி. படிப்பை (60 மணி நேரம்) 'ஸ்கில் இந்தியா' (skillindiadigital.gov.in) தளத்தில் படிக்கலாம்.
எனவே, உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, துறைக்கு ஏற்றவாறு அமைந்துள்ள இ.எஸ்.ஜி. படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். இன்றைய சூழலில் தொழில் நிறுவனங் களுக்கு இத்தகைய பயிற்சி பெற்றவர்கள் தேவைப்படுகிறார்கள்.