கல்வி - வேலை வழிகாட்டி

மாணவர்களின் மனநலனில் தேவை கவனம்

செய்திப்பிரிவு

இந்திய உயர் கல்வி நிறுவனங் களில் மாணவர்களின் மன நலம் குறித்து, உச்ச நீதிமன்றம் அமைத்த தேசியப் பணிக்குழுவின் இடைக்கால அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.

2.43 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 15% பேர் கடந்த ஆறு மாதங்களில் தொடர்ந்து மன அழுத்தம், பதற்றம் அல்லது தாழ்வு மனப்பான்மை எதிர்கொண்டதாகவும், 9% பேர் கடந்த ஓராண்டில் அவ்வப்போது தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், 34% பேர் தங்கள் கல்வி நிறுவனத்தில் தனிமைப் படுத்தப்பட்டதாக உணர்ந்த தாகவும், 32% பேர் தங்கள் நிறு வனத்தில் மனநல ஆலோசனை சேவை இல்லை என்றும் தெரி வித்துள்ளனர்.

இந்த ஆய்வு முடிவுகள் தொடக்கநிலைத் தரவுகளாகவே கருதப்பட வேண்டும் எனப் பணிக்குழு குறிப்பிட்டுள்ளது. இறுதி அறிக் கையை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

தற்கொலை எண்ணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாடு அரசின் மனநல மருத்துவ உதவி எண் 104 அல்லது சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் 044-24640050 ஆகியவற்றைத் தொடர்புகொள்ளலாம்.

SCROLL FOR NEXT