உயர் கல்வி மாணவர்கள், போட்டித் தேர்வர்களுக்குப் பயன்படும் முக்கிய நூல்கள்:
உலகளாவிய கல்வி வாய்ப்பு: பள்ளிப் படிப்பை நிறைவு செய்யும் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளையே தேர்ந்தெடுக்க நினைக்கிறார்கள். ஆனால், இத்துறைகளைத் தாண்டி உருவாகியிருக்கும் உலகளாவிய கல்வி, வேலைவாய்ப்புகளைப் பற்றியும் அந்த வாய்ப்புகளைப் பெற எப்படித் தயாராக வேண் டும் என்பதைப் பற்றியும் ‘கற்பது உலகளவு' கட்டுரைத் தொகுப்பு விளக்குகிறது.
‘கற்பது உலகளவு’,
தா.நெடுஞ்செழியன்
விகடன் பிரசுரம்
தொடர்புக்கு: 9500068144
அறியப்பட வேண்டிய அறிவியலாளர்கள்: வான் இயற்பியல் முன்னோடி அன்னபூரணி சுப்ரமணியம், கோவாக்சின் தடுப்பூசியைக் கண்டுபிடித்த பிரக்யா யாதவ், இழைக் கோட்பாட்டில் புரட்சிகர பங்களிப்பை வழங்கிய அசோக் சென், தைராய்டு இயக்குநீர் கண்டு பிடிப்பாளர் கோவிந்தசாமி முகேஷ் போன்ற இந்தியாவின் உயரிய அறிவியல் விருது பெற்றவர்கள், கண்டுபிடிப்பு உரிமங்கள் பெற்ற பொறியாளர்கள்/தொழில்நுட்ப அறிவியலா ளர்கள் எனச் சிறந்த 100 பேரை இந்த நூல் அறிமுகப்படுத்துகிறது. இவர்களில் 30க்கும்மேற்பட்டவர்கள் தமிழர்கள் என்பதும், நான் கில் ஒருவர் பெண் என்பதும் தனிச் சிறப்பு.
‘இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100',
ஆயிஷா
இரா. நடராசன்
பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு: 9444960935
பெற்றோர் கவனத்துக்கு... ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. அது வளர்க்கப்படும் விதம் வெவ்வேறானது. பெற்றோரின் கடமை, பெற்றோர் உளவியல், குழந்தைகளால் மதிக்கப்படும் பெற்றோராக இருப்பது என்றால் என்ன என்பது போன்று பல கண்ணோட்டங்கள் இப்புத்தகத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. இன்றைய பெற்றோரிடம் உரையாடலை நடத்த முயற்சி செய்கிறது இப்புத்தகம்.
பேசும் பொற்சித்திரமே - குழந்தைமைப் பார்வையிலிருந்து பெற்றோராயிருத்தல்
சாலை செல்வம் | கற்றளி பதிப்பக்ம் | தொடர்புக்கு: 7397334916
போட்டித் தேர்வர்களின் வெற்றிக்கு... இந்து தமிழ் இயர்புக்கில் 15க்கும் மேற்பட்ட துறைசார் நிபுணர்களின் சிறப்புக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. புதிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரலாறு, உலகை ஆளப்போகும் 20+ நவீனத் தொழில்நுட்பங்கள், டிஎன்பிஎஸ்சி பொதுத் தமிழ் தேர்வுக் குறிப்புகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சஜ்ஜன் யாதவ் எழுதியுள்ள ‘ஐ.ஏ.எஸ். வெற்றிச் சூத்திரங்கள்' என்கிற விரிவான தேர்வு வழிகாட்டியும் இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் கவனம்பெற்ற 45 விஷயங் களுக்கான விரிவான விளக்கங்கள் ‘ஏன்? எதற்கு? எப்படி?' பகுதியில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
வரலாறு - 50 கேள்விகள், விரிவான பதில்கள், விடுதலைப் போராட்ட வீரர், வீராங்கனைகள் 300 கேள்வி- பதில்கள் போன்றவை போட்டித் தேர்வுத் தயாரிப்புக்குப் பெரிதும் உதவும்.
இந்து தமிழ் இயர்புக் 2026 இந்து தமிழ் திசை
தொடர்புக்கு: 7401296562 / 7401329402
தகவல் களஞ்சியம்: ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் கடந்த ஆண்டு வெளியான முக்கியமான செய்திக் கட்டுரைகளின் சுருக்கங்கள், சிறப்புக் கட்டுரைகள், உலகம் - இந்தியா தொடர்பான நாள் அடிப்படையிலான தகவல்கள், ஆளுமை கள் பற்றிய குறிப்புகள் அடங்கியது ‘தி இந்து இயர்புக் 2026’.
‘தி இந்து’ குழுமத்தில் இருந்து முதல்முறை யாக ஆங்கில மொழியில் உருவாக் கப்பட்டுள்ள இந்த இயர்புக் 495 பக்கங்களைக் கொண்டது. வண்ண ஒளிப்படங்களோடு கூடிய விரிவான தகவல் தொகுப்பான இந்தப் புத்தகம் போட்டித் தேர்வர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்.
தி இந்து இயர்புக் 2026
தி இந்து
தொடர்புக்கு: 1800 102 1878
தொகுப்பு: ராகா