மாயா பஜார்

அறிவியல் கதை அமுதம் | விடுமுறையில் வாசிப்போம்

நேயா

தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் அறிவியல் சார்ந்து தொடக்கக் காலம் முதலே கவனம் செலுத்தப்பட்டு வந்துள்ளது. தொடக்கக் கால அறிவியல் தமிழில் தொடர்ச்சியாக இயங்கிய பெ.நா.அப்புசுவாமி போன்றோர் குழந்தைகளுக்கு எழுதியுள்ளார்கள்.

‘கல்வி’ கோபாலகிருஷ்ணன், வாண்டுமாமா, ரேவதி எஸ்.ஹரிஹரன் உள்ளிட்ட சிறார் எழுத்தாளர்கள் அறிவியல் கதைகள் எழுதுவதில் தனிக் கவனம் செலுத்தியுள்ளார்கள்.

அந்த வகையில் கடந்த 75 ஆண்டுகளில் எழுதப்பட்ட சிறார் அறிவியல் கதைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பாக சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ள இந்த நூல்கள் அமைந்துள்ளன.

அழ.வள்ளியப்பா, வாண்டுமாமா, ரேவதி எஸ்.ஹரிஹரன் என அன்றைய எழுத்தாளர்கள் தொடங்கி தற்போது எழுதிவரும் ஆயிஷா இரா.நடராசன், மருதன், உதயசங்கர், கமலாலயன், விழியன், விஷ்ணுபுரம் சரவணன், இ.ஹேமபிரபா வரை 45க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் கதைகள் தொகுக்கப் பட்டுள்ளன.

இயற்கை, சூழலியல், வானியல், பொது அறிவியல், மருத்துவ அறிவியல் என ஒவ்வொரு கதையும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. நூலில் இயற்கை அறிவியல், வானியல் கதைகள் அதிகம் உள்ளதை வைத்துப் பார்க்கும்போது, அந்த வகைக் கதைகளே அதிகம் எழுதப் பட்டுள்ளன என ஊகிக்கலாம்.

பழைய எழுத்தாளர்களின் அறிவியல் கதைகளைக் கூடுதலாகச் சேர்த்திருக்கலாம். ஓவியங்கள் இன்னும் மேம்பட்டு இருந்திருக் கலாம். அதேநேரம், இது போன்ற தொகுப்பு முயற்சிகள், தமிழில் சிறார் இலக்கியப் பிரிவுகள் சார்ந்து ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப் புரிந்துகொள்ள உதவும்.

சிறார் அறிவியல் சிறுகதைத் திரட்டு பாகம் 1, 2,

தொகுப்பு: கொ.மா.கோ.இளங்கோ,

சாகித்திய அகாதெமி,

தொடர்புக்கு: 044-2431 1741

SCROLL FOR NEXT