மாயா பஜார்

அகரனுடன் ஓர் இந்தியச் சுற்றுலா | விடுமுறையில் வாசிப்போம்

நேயா

பத்து வயதுச் சிறுவன் அகரன், அறிவுத்திறன்மிக்கக் குழந்தை. அவனது தந்தை பாலன், தொல்லியல் துறையில் வேலை பார்க்கிறார். கதை தொடங்கும்போது கன்னியாகுமரி சங்குத்துறையில் சூரிய உதயத்தைப் பார்ப்பதற்காகக் காத்திருக்கும் அவர்கள், அரசு வேலை இடமாற்றம் காரணமாகப் பல்வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்கிறார்கள்.

லடாக்கில் இருக்கும் காந்தமலை குறித்த அறிவியல் கற்பிதத்தைக் களையும் கடைசிக் கதையுடன் நூல் நிறைவடைகிறது. இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட மக்கள், பண்பாடு, வரலாறு, பழக்கவழக்கங்கள் கொண்ட ஒரு நாடு. இதுவே நம் நாட்டின் சிறப்பு, தனித் தன்மையும்கூட.

பல்வேறு ஊர்களை அடிப்படையாகக் கொண்ட கதை இது. தண்ணீருக்காக மக்கள் படும் பாட்டையும், பசியால் யாரும் வாடக் கூடாது எனச் சீக்கிய செயல்படுவதையும் இக்கதைகள் கூறுகின்றன.

மீன் பிடித்தல், கைத்தறி, சாவ் தற்காப்பு நடனம், தொல்லியலின் சிறப்புகள் எனப் பல்வேறு தொழில்கள் குறித்தும் கதைகள் பேசுகின்றன. காட்டுப் பயணம், பறவைப் பார்த்தல், ராஃப்டிங் எனும் படகு செலுத்துதல் எனப் பல்வேறு திறந்தவெளி செயல்பாடுகளை இக்கதைகளில் குழந்தைகள் மேற்கொள்கிறார்கள்.

ஒரு சிறார் நாவலுக்கு உரிய சம்பவங்கள், திருப்பங்கள், சுவாரசியம் ஆகியவை இந்த நூலில் சிறப்பாக அமைந்துள்ளன. ஆசிரியரின் முதல் சிறார் நூல் இது என்கிற வகையில் பாராட்டுக்குரியது. - நேயா

காஷ்குமரி,

நெய்வேலி பாரதிக்குமார், நிவேதிதா பதிப்பகம்,

தொடர்புக்கு: 89393 87296

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT