இந்து டாக்கீஸ்

உதவியாளரின் பதிவு! | திரை நூலகம்

ரசிகா

எம்.ஜி.ஆர். குறித்து நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் என்றாலும் பெரும்பாலும் எம்.ஜி.ஆரின் புகழ்பாடுவதுதான் நோக்கமாக இருக்கும்.

இந்தப் புத்தகமும் அதைத்தான் செய்கிறது. ஆனால், முற்றிலும் புதிய தளத்தில், புதிய வடிவத்தில் ஒரு காலப்பேழைபோல மிகைப் படுத்தாமல் அதைச் செய்திருக்கிறது.

காரணம், எம்.ஜி.ஆர். முதல்வராகப் பொறுப்பேற்றக் காலம் தொட்டு, அவருடைய நேர்முக உதவியாளராகப் பணிபுரிந்த கே.மகாலிங்கம், எம்.ஜி.ஆரின் பொதுவாழ்க்கைத் தருணங்களில் தான் நேரில் கண்டு அனுபவித்த நிகழ்வுகளை உள்ளது உள்ளபடி சின்ன சின்னக் கட்டுரைகளாக இந்த நூலில் பதிவுசெய்திருக்கிறார்.

கட்சி அரசியலில் இருந்து அரசாட்சிவரை, எங்கள் குலதெய்வம் எம்.ஜி.ஆர்., பொன்மனச் செம்மலின் பெருந் தன்மை, மனிதாபிமானமே மக்கள் திலகம், புரட்சித் தலைவரும் பிற கலைஞர்களும், புரட்சித்தலைவரின் மரியாதைக்கு உரியவர்கள், மக்கள் திலகமும் சில சுவையான சூடான சம்பவங்களும், புரட்சித் தலைவரின் பொற்கால ஆட்சி உள்ளிட்ட 8 பிரிவுகளில் மொத்தம் 131 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன்

கே.மகாலிங்கம்

456 பக்கங்கள் | விலை ரூபாய் 400

மூன்றெழுத்து பதிப்பகம்

சென்னை - 600028

தொடர்புக்கு: 94440 19079

SCROLL FOR NEXT